Saturday, 22 April 2017

Nadigar Sangam Support's DMK?

Nadigar Sangam Support's DMK?

திமுக தலைமைக்கு நடிகர்சங்கம் ஆதரவு !
 
விவசாயிகளுக்கு ஆதரவாக வருகிற 25-ம் தேதி செவ்வாய் கிழமையன்று திமுக தலைமையில் அனைத்து கட்சிகள் சார்பாக நடக்கும் மாநிலம் தழுவிய அடையாள போராட்டம் நடைபெறுகிறது. ஆளும் மத்திய மாநில அரசுகளின் கடசிகள் ஆதரவு இல்லாமல் நடக்கும்   இந்த போராட்டத்திற்க்கு தென்னிந்திய நடிகர் சங்கம் தங்களது ஆதரவை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது.
 
" பல வருடங்களாக இயற்கையாலும்,காவிரி பிரச்சனையாலும் தொடர்ச்சியாக ஏமாற்றபட்டு வரும் தமிழக விவசாயிகள் ,அரசிடம் வாங்கிய கடனை கட்ட முடியாமல், பலரும் தற்கொலை முடிவை நாடி வருகின்றது வேதனை அளிக்கிறது.  விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டியது மத்திய - மாநில அரசுகளின் கடமையாகும். அதை வலியுறுத்தி வருகிற 25-ம் தேதி அனைத்து கட்சிகள் நடத்தும் மாநிலம் தழுவிய அடையாள போராட்டத்திற்க்கு தென்னிந்திய நடிகர் சங்கம் தனது முழு ஆதரவையும் தெரிவித்து கொள்கிறது "
 

No comments:

Post a Comment