Tuesday, 25 April 2017

TTV Dinakaran's midnight arrest

TTV Dinakaran's midnight arrest
TTV Dinakaran's midnight arrest
In a dramatic late-night development, Sasikala's nephew and AIADMK (Amma) leader TTV Dinakaran, along with his aide Mallikarjuna, was arrested by Delhi Police in cash for symbol case.
Dinakaran was questioned by the Crime Branch for the fourth straight day on Tuesday. Sources said that Dinakaran’s last phone conversation with Sukesh was 20 hours before his arrest on April 16. Sukesh had reportedly introduced himself to Dinakaran as a HC judge and offered to help him win the party symbol.
Dinakaran, who was appointed as deputy general secretary by Sasikala, has been isolated in his party amid moves to merge rival factions led by Tamil Nadu Chief Minister EK Palaniswami and his predecessor O Panneerselvam.
நள்ளிரவில் டிடிவி தினகரன் கைது 
இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் சசிகலாவின் உறவினரும் அதிமுக (அம்மா அணி) துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நள்ளிரவில் டெல்லி போலீசாரால் கைது செய்யப் பட்டுள்ளார். தினகரனுடன் அவரது சகா மல்லிகார்ஜுனாவையும் கைது செய்துள்ளனர் டெல்லி போலீசார். 

நேற்றைக்கு நான்காவது நாளாக டெல்லி குற்றப் பிரிவு போலீசாரின் விசாரணையில் இருந்தார் டிடிவி தினகரன். இதே வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுகேஷிடம் ஏப்ரல் 16ஆம் தேதி, சுகேஷ் கைதுக்கு 20 மணிநேரம் முன்னால் அவருடன் தினகரன் பேசியதற்கான ஆதாரங்கள் போலீசாரிடம் சிக்கி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்த பிறகு, இரட்டை இல்லை சின்னம் தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டது. அதனை மீட்க, உயர்நீதிமன்ற நீதிபதி என்று கூறிக் கொண்ட சுகேஷுக்கு சுமார் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் முன்தொகையை தினகரன் கொடுத்ததாக கூறப்படுகிறது. 

ஓபிஎஸ் அணியினருடன் இணைப்பிற்கு முன்னோட்டமாக தினகரன் உள்ளிட்டோரை கட்சியை விட்டு ஒதுக்கி வைக்க உள்ளதாக அதிமுகவின் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து செய்தியாக்களர்களிடம் பேசிய தினகரன் தானே கட்சியில் இருந்து ஒதுங்கி இருக்க முடிவு செய்திருக்கிறேன். என்னால், கட்சிக்கும் ஆட்சிக்கும் எந்தவித பாதிப்பும் வந்துவிடக் கூடாது என்று உறுதியாக இருக்கிறேன் என்றும் கூறினார்.இந்நிலையில் தற்போது கைது செய்யப்பட்டு தனிமை படுத்தப்பட்டுள்ளார் தினகரன். இதன் மூல, இரு அணிகளின் இணைப்பும் வேகமெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment