Monday, 24 April 2017

Jyothika says, 'I'm nothing without Suriya'

Jyothika says, 'I'm nothing without Suriya'
Jyothika says, "I'm nothing without Suriya"
The audio launch of Magalir Mattum held on Monday at Sathyam Cinemas in Chennai. In the event, actress Jyothika asked directors of big hero films not to write dumb characters and double meaning dialogues for heroines. "Today cinema has a big impact on youngsters; a hero should romance one heroine at a time. Let's not increase the number of heroines", said Jyothika. 
Jyothika has stressed that filmmakers should be socially responsible. Talking about the film, the actress said "When Bramma narrated me the story, he wanted to show me younger than my real life age, which is a rarity in cinema. Generally, we 30+ heroines only get older characters like a mom of fourteen years old. I should thank Bramma for giving the opportunity to work with three wonderful actors- Saranya Ponvannan, Urvashi and Bhanupriya ". “Bhanupriya's dubbing is better than mine, she looked very cute. Urvashi is super talented that she can talk about anything around her including a medicinal quality of tree whereas Saranya Ponvannan can be rightly called as the Lady Superstar, she is a great at multitasking". The audio was launched by the mothers of Jyothika, Suriya and Bramma.
'சூர்யா இல்லையென்றால் நானில்லை' உருகிய ஜோதிகா 
தேசிய விருது பெற்ற இயக்குனர் பிரம்மாவின் இயக்கத்தில் நடிகை ஜோதிகா நடித்திருக்கும் மகளிர் மட்டும் படத்தின் பாடல்கள் திங்கள் அன்று வெளியிடப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் சினிமா இயக்குனர்களுக்கு ஒரு கோரிக்கையை வைத்துள்ளார் ஜோதிகா. "பெரிய நடிகர்களின் படங்களை இயக்கும் இயக்குநர்களுக்கு ஒரு வேண்டுகோள். உங்களுடைய படங்களில் பெண்களுக்கு கொஞ்சம் மரியாதை கொடுங்கள். அம்மா, தங்கை, மனைவி என உங்களைச் சுற்றியிருக்கும் பெண்களின் கதாபாத்திரங்களை படங்களின் நாயகிக்கு கொடுங்கள்.

நடிகர்களுக்கு கோடிக்கணக்கில் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே நடிகர்கள் என்ன செய்கிறார்களோ, அதனை பின் தொடர்வார்கள். சினிமாவில் நடப்பவை இளைஞர்களுக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். வீட்டில் இருக்கும் பெண்களைப் போன்று நாயகிக்கு உடைகள் கொடுக்க முடியாது எனத் தெரியும். தயவு செய்து கொஞ்சம் புத்திசாலித்தனமான கதாபாத்திரங்கள் கொடுங்கள். நகைச்சுவை நடிகர் அருகில் நிற்க வைத்து இரட்டை அர்த்த வசனங்களைப் பேச வைக்காதீர்கள். மிக கேவலமான அறிமுக காட்சியை கொடுக்காதீர்கள். ஒரு நாயகனுக்கு 4 நாயகிகள் வைத்தீர்கள் என்றால், இளைஞர்களும் நாமும் 4 காதலிகள் வைத்துக் கொள்ளலாம் என எண்ணுவார்கள். படத்தில் ஒரு நாயகனுக்கு ஒரு நாயகி போதும். நம்மை சுற்றி இருக்கும் பெண்களுக்காக சமூக பொறுப்புடன் நடந்து கொள்வோம்." 

சூர்யா இல்லையென்றால் இங்கு நானில்லை. தமிழ் திரையுலகில் ஒரு நாயகியின் உண்மையான வயதுக்கு, குறைவான வயதுடைய பாத்திரம் கொடுப்பவர் இயக்குநர் பிரம்மா மட்டும்தான். நிஜமாகவே இந்த எண்ணத்துக்கு இயக்குநருக்கு நன்றி சொல்ல வேண்டும். ஊர்வசி மேடம், பானுப்ரியா மேடம், சரண்யா மேடம் என 3 ஜாம்பவான்களுடன் நடித்தது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. சரண்யா மேடத்துக்குத் தான் உண்மையில் பெண் சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுக்க வேண்டும். ஏனென்றால் குடும்பம், படங்களில் நடிக்கிறார், டெய்லரிங் யூனிட் நடத்துக்கிறார் என நிறைய பெண்களுக்கு வேலை கொடுக்கிறார்." என்று பேசினார் ஜோதிகா. மகளிர் மட்டும்' இசையை சூர்யாவின் அம்மா லட்சுமி சிவகுமார், ஜோதிகாவின் அம்மா சீமா, பிரம்மாவின் அம்மா பார்வதி கோமதி நாயகம் மற்றும் 2டி ராஜாவின் அம்மா சாந்தா கற்பூர சுந்தர பாண்டியன் இணைந்து வெளியிட்டார்கள்

No comments:

Post a Comment