Wednesday, 26 April 2017

Baahubali 2's scenes leaked online ahead of release

Baahubali 2's scenes leaked online ahead of release
Baahubali 2's scenes leaked online ahead of release 
With just 2 days to go for the release of the film, Baahubali: The Conclusion is making news for all kinds of reasons. While the world is gearing up to witness the epic sequel, reports suggest that a video from Baahubali 2 has been leaked on the internet. According to a reports, the leaked video was from a preview show, which went viral on various social media platforms.  The video showed actors Prabhas and Anushka Shetty preparing an army for a battle.
However, producer Shobu Yarlagadda took to Twitter and dismissed rumours regarding the alleged leak. He said, "Except for screening to various "censor boards" in different countries, there have been no screenings of Baahubali 2 till now anywhere"
Earlier this week, Baahubali had a fantastic response in advance booking, as most of the tickets for the first weekend were sold out. Be it the Kannada row or the discrepancies between theatre owner and distributor in Tamil Nadu, Baahubali 2 has been battling a lot of challenges before its release.
இணையத்தில் வெளியான பாகுபலி-2 காட்சிகள் 
இன்னும் இரண்டு நாட்களில் வெளியாக உள்ள பாகுபலி-2 படத்தின் இரண்டு நிமிட காட்சிகள் ரிலீசுக்கு முன்பே இணையத்தில் வெளியாகி உள்ளன. உலகமே எதிர்பார்த்துக் காத்திருக்கும் பிரமாண்டமான  பாகுபலி 2வின் காட்சிகள் வெளியாகி இருப்பது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. சமூக வலைத்தளங்களில் பரவி வரும் அந்த வீடியோவில் பிரபாஸ், ராணா மற்றும் அனுஸ்கா ஆகியோர் போருக்குத் தயார் ஆவது போன்று காட்சிகள் அமைந்துள்ளன. கட்டப்பாவும், படையை வழி நடத்துவது போன்றும் உள்ளது. 

துபாயில் நடைபெற்ற பாகுபலி 2 பிரீமியர் ஷோவில் இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், படத்தின் காட்சிகள் வெளியானதை மறுத்துள்ள தயாரிப்பாளர் சோபு யர்லாக்தா, பல்வேறு நாடுகளில் உள்ள தணிக்கை குழுவுக்கு  அனுப்பியதை தவிர வேறு எங்கும் இதுவரை பாகுபலியின் சிறப்பு பிரீமியர் காட்சிகள் திரையிடப் படவில்லை என்று தெரிவித்துள்ளார். 

சமீபத்தில், தணிக்கை செய்யப்பட்டு யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ள இப்படம், ஆன்லைன் புக்கிங்கில் முன்கூட்டியே பெரும் சாதனையைப் படைத்துள்ளது. பிரபல ஆன்லைன் டிக்கெட் புக்கிங் இணையதளங்களை காணும்போது, தென்னிந்தியா முழுவதுமே, மே மாதம் முதல் வாரம் வரை படத்தின் பெரும்பாலான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளன. தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து நாளை திரைக்கு வருமகிறது பாகுபலி 2. ரசிகர்கள் கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என அறிய ஆவலாய் காத்துக் கொண்டிருக்கின்றனர். 

No comments:

Post a Comment