Friday, 21 April 2017

Amitabh Bachchan to play 'Power Paandi' in Hindi

Amitabh Bachchan to play 'Power Paandi' in Hindi
Amitabh Bachchan to play 'Power Paandi' in Hindi
The directorial debutant film of Dhanush has hit the theaters and the Tamil flick is doing well at the box office. Pa Paandi aka Power Paandi starring Rajkiran in the lead role while Prasanna, Chaya Singh, Revathi, Rinson are also playing the important roles in the film. Pa Paandi (Power Paandi) got positive response from the critics and the positive response from the audience. 
Dhanush's friends from Bollywood have also shared their positive feedback after watching the film Power Paandi. They have also expressed their desire to remake this film in Hindi. Bollywood celebrities feel that Super star Amitabh Bachchan would be apt for the role of Rajkiran in Tamil version. Dhanush is likely to direct the remake in Hindi too. We learn that the initial process will commence once Dhanush completes shooting of Vada Chennai.

இந்தியில் பவர் பாண்டியாகும் அமிதாப் பச்சன் 

நடிகர் தனுஷ் முதன் முறையாக இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கும் படம் பவர் பாண்டி ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நடிகர் ராஜ்கிரண் டைட்டில் ரோலில் நடிக்க, நடிகர் பிரசன்னா, நடிகை சாயாசிங், ரேவதி, ரின்சன், டிடி  ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரங்களில்  நடித்திருந்தனர். இந்த படத்தில், இளம் வயது பவர் பாண்டியாக நடித்தும் இருந்தார் நடிகர் தனுஷ். இவருக்கு ஜோடியாக கெஸ்ட் ரோலில் நடித்திருருந்தார் நடிகை மடோனா செபாஸ்டின்.  

தமிழ் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுக் கொண்டிருக்கும் பவர் பாண்டி தற்போது, இந்தியில் தயாராக உள்ளது. ராஞ்சனா படம் மூலம் இந்தியில் அறிமுகமான தனுஷுக்கு பாலிவுட்டிலும் பெரிய நட்பு வட்டம் உள்ளது. பவர் பாண்டி படத்தை பார்த்த இந்தி பிரபலங்கள், இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்ய ஆர்வம் காட்டி உள்ளனர். இந்தி ரீமேக்கையும் தனுஷே இயக்க வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்துள்ளனர். படத்தில் ராஜ்கிரண் நடித்த ரோலுக்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் மிகவும் பொருத்தமாக இருப்பார் என்று பேச்சு அடிபடுகிறது. படத்திற்கு கிடைக்கும் நல்ல ரெஸ்பான்ஸை பார்த்து அமிதாப்பை வைத்து இந்தியிலும் படத்தை இயக்க ஆர்வமுடன் இருக்கிறார் தனுஷ். தற்போது வட சென்னை படத்தில் நடித்து வரும் தனுஷ், அதன் பிறகு இந்தி ரீமேக் வேலைகளை துவங்குவார் என்று எதிர்பார்க்கப் படுகிறது. 

No comments:

Post a Comment