Monday, 24 April 2017

Why the iconic pair of Titanic pair never fall in love?

Why the iconic pair of Titanic pair never fall in love?
Why the iconic pair of Titanic pair never fall in love?
Every time we think of on-screen romantic love stories, Jack and Rose from Titanic immediately come to my mind. When the movie first came out, many went and saw it four times in the theater. It was so hard not to get obsessed with it. One of the reasons we enjoyed watching it was because of the chemistry between Leonardo DiCaprio and Kate Winslet. All the time, fans got the feeling that it wasn’t only their characters that were in love with each other, Leo and Kate were meant to be together. They always had googly eyes when talking about each other, it made everything seem like they belonged together. But, unfortunately they have never made it past the friendship stage. So, what really happened? Why did they never break the rules? Kate reveals everything in an interview that made all of us heartbroken.
Even after Titanic was over, the two were still close with each other. They called each other “babe” and continued to support each other. When the actors reunited on screen to film Revolutionary Road and we still had hopes for them.But, hopes faded when Kate married Ned Rocknroll in 2012. The actress said that nothing happened between them because “there was never any romantic thing.” She continued by saying that he never really saw her in a romantic way.“He always saw me as one of the boys.”She says that she knows why everyone is upset: “It’s so disappointing for people to hear that, because in the soap opera of the Kate and Leo story we fell in love at first sight, but actually we never did.”

“We needed each other to lean on because we were very young and working all kinds of crazy [long] hours and it was a shock to the system.” Let’s at least hope they remain friends forever.
டைட்டானிக் ஜோடி லியோ-கேட் ஏன் காதலிக்கவில்லை?
திரைப்படங்களில் நம்மை வெகுவாக கவர்ந்த காதல் ஜோடிகளில் 'டைட்டானிக்' ஜாக் மற்றும் ரோஸ்-க்கு முக்கிய இடம் உண்டு. டைட்டானிக் படம் ரிலீஸ் ஆன போது, ஜாக், ரோஸ் ஆக நடித்த லியானார்டோ டி காப்ரியோ மற்றும் கேட் வின்ஸ்லெட் ஜோடியின் கெமிஸ்ட்ரிக்காகவே நான்கு, ஐந்து முறை தியேட்டர் சென்றவர்கள் உண்டு.  படத்தை பார்க்கையில் நமக்குத் தோன்றுவது, காதல் கொள்வது அந்த கதாப்பாத்திரங்கள் மட்டுமல்ல, கேட் மற்றும் லியோ கூட காதல் கொண்டிருப்பார்கள் என்ற எண்ணம் தோன்றுவது நிஜம். ஏனெனில், கேட் மற்றும் லியோ இருவரும் ஒன்றாக இருப்பதற்காவே பிறந்தவர்கள். ஆனால், துரதிர்ஷ்டமாக இந்த ஜோடி நட்பை தாண்டி செல்லவில்லை. உண்மையில் அவர்களுக்குள் ஏன் காதல் தோன்றவில்லை, இந்த மில்லியன் டாலர் கேள்விக்கு சமீபத்தில் ஒரு பேட்டியில் பதில் சொல்லி இருக்கிறார் நடிகை கேட் வின்ஸ்லெட்.

டைட்டானிக் படம் முடிந்த பின்னரும் நல்ல நட்பிலேயே இருந்துள்ளனர் லியோ மற்றும் கேட். ஆஸ்கர், கோல்டன் க்ளோப் உள்ளிட்ட விருது வழங்கும் விழாக்களில் ஒன்றாகவே கலந்து கொண்டனர். பொதுவில் அனைவர் முன்னிலையிலும் ஒருவரை ஒருவர் அன்புடன் 'பேபி' என்றே அழைத்துக் கொள்வர். மீண்டும் 'ரெவல்யுஷனரி ரோடு' என்ற படத்தில் ஜோடி சேர்ந்தனர், அப்போதும் இருவரும் காதல் கொள்வார்கள் என்று ரசிகர்கள் நம்பினர். ஆனால், 2012-ல் இயக்குனர் நெட் ராக்அன்ரோல்-ஐ கேட் திருமணம் செய்தபோது அதிர்ச்சி ஆகினர் ரசிகர்கள். 

"எங்கள் இருவருக்கும் எப்போது ரொமான்ஸ் என்ற விஷயமே இருந்ததில்லை" என்கிறார் நடிகை கேட்.  லியோ எப்போதுமே என்னை ஒரு ஆண் நண்பர் போன்றே நடத்துவார். எங்கள்  இருவரையும் விரும்பும் ரசிகர்களுக்கு இது வேதனையாக தான் இருக்கும். பார்த்தவுடன் காதலில் விழும் அற்புதம் எங்கள் வாழ்வில் நிகழ்ந்ததே இல்லை. ஒருவருக்கொருவர் துணையாக எப்போதுமே நாங்கள் நல்ல நண்பர்களாகவே இருப்போம்" என்றும் கூறியுள்ளார் கேட்.  காதலர்களாக இல்லை  என்றாலும், நண்பர்களாகவே இவ்விருவருவரும் காலம் முழுக்க இருக்க வேண்டும் என்பதே நம்மை போன்ற ரசிகர்களின் ஆசை. 

No comments:

Post a Comment