Tuesday, 25 April 2017

Music Director's Bharani Low Grade Song

Music Director's Bharani Low Grade Song

லோக்கலா இறங்கிய இசையமைப்பாளர்!
 
பெரியண்ணா படத்தின் மூலம் அறிமுகமாகி, பார்வை ஒன்றே போதும், சார்லி சாப்ளின், சுந்தரா டிராவல்ஸ் போன்ற படங்களின் மூலம் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்த இசையமைப்பாளர் பரணி முதன் முதலாக இயக்குனர் அவதாரம் எடுக்கும் படம்  'ஒண்டிக்கட்ட' பிரண்ட்ஸ் சினி மீடியா என்ற பட நிறுவனம் சார்பாக மேகலா.ஆர்.தர்மராஜ், ஷோபா.கே.கே.சுரேந்திரன், சுமித்ரா பரணி ஆகியோர் இனணந்து தயாரிக்கும் படத்திற்கு 'ஒண்டிக்கட்ட' என்று பெயரிட்டுள்ளனர்.
 
தெனாவட்டு, குரங்கு கைல பூ மாலே, எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது போன்ற படங்களில் காரக்டர் ரோல்களில் நடித்த விக்ரம் ஜெகதீஷ் இந்த படத்தில் நாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக நேகா நடிக்கிறார். இவர் உச்சத்துல சிவா, தண்ணில கண்டம் போன்ற படங்களில் நாயகியாக நடித்தவர். மற்றும் தர்மராஜ், கலைராணி, சாமிநாதன், முல்லை, கோதண்டம், சென்ராயன், மதுமிதா, ஹலோ கந்தசாமி ஆகியோர் நடிக்கிறார்கள்.      

படம் பற்றி இயக்குனர் பரணியிடம் கேட்டபோது  ஒரு கிராமத்து வாழ்க்கையை செண்டிமெண்ட் கலந்து உருவாக்கி இருக்கிறோம்.  சமீபத்தில் இந்த படத்திற்காக  தர்மராஜ் எழுதிய பக்கா லோக்கல் தனமான பாடலான  “ துண்டு பீடி இல்லேன்னா  தூக்கம் வராது  சரக்கு அடிக்க வில்லையின்னா சத்தம் வராது “                                                                                                        
                                                                                  
என்ற பாடல் காட்சியை பாபநாசம் அருகே குப்பை கொட்டும் இடத்தில் படமாக்கப் பட்டது.  இந்த பாடல் காட்சிக்காக மலையளவு குப்பை மேட்டில் நாற்றத்தை பொருட் படுத்தாமல் பூச்சி, கொசு, எறும்பு கடிகளை தாங்கிக்கொண்டு விக்ரம்ஜெகதீஷ், சென்றாயன், கர்லிங்கண்ணன், அர்ஜுனா ஆகியோர் நடித்தனர். இன்னும் சில தினங்களில் இந்தப் பாடல் பட்டி தொட்டியெங்கும் ஒலிக்கும் என்பது நிச்சயம்.
எல்லா பாடல்களுமே எனக்கு இன்னொரு உயரத்தை அடையாளம் காட்டும் என்பது நிச்சயம் என்றார் பரணி.

No comments:

Post a Comment