Thursday, 20 April 2017

Verdict on Dhanush's 'parent' case

Verdict on Dhanush's 'parent' case
Verdict on Dhanush's 'parent' case
Actor Dhanush was dragged to court by an elderly couple who claimed Dhanush is their son. Madurai Bench of the Madras High Court to get an identification mark verification test. The elderly couple claimed that their son had a mole on left clavicle bone part and a scar of the left elbow. Dean of the Madurai Medical College (MMC) has submitted the medical report after examining the actor before the court on a sealed envelope.
Actor Dhanush had earlier refuted claims made by the elderly couple. He also raised suspicion that the couple wanted to extract money from him and hence allege that they are his biological parents. Today, the court has rubbished the allegations filed b the couple and dismissed the pettition. We are sure that this has given actor Dhanush a relief.

தனுஷின் பெற்றோர் யார் என்ற வழக்கில் அதிரடி தீர்ப்பு 
 
நடிகர் தனுஷ் தங்களுடைய மகன் என்று தொடரப்பட்ட வழக்கில் இன்று அதிரடி தீர்ப்பு அளித்துவழக்கை தள்ளுபடி செய்தது மேலூர் நீதிமன்றம். சமீபத்தில், மருத்துவர்கள் தங்களது அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர். அதில், தனுஷின் உண்மையான பெற்றோர் எனக்கூறிக் கொள்ளும் தம்பதி தாக்கல் செய்திருந்த பள்ளி பதிவேட்டில் உள்ள அங்க அடையாளங்களை சரி பார்க்கும் படி நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
 
சென்ற மாதம், நீதிமன்றத்தில் ஆஜர் ஆன நடிகர் தனுஷ், மருத்துவர்களின் பரிசோதனைக்கு ஆட்படுத்தப் பட்டார். பள்ளி சான்றிதழில் கூறப்பட்ட அங்க அடையாளங்களை மருத்துவர்கள் சோதனை இட்டனர். அந்த சோதனையின் அறிக்கையை  நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர் மருத்துவர்கள். இதன் அடிப்படையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 
 
வழக்கில் பெற்றோர் எனக்கூறிக் கொள்ளும் தம்பதி தாக்கல் செய்திருந்த ஆவணங்களை சரிபார்த்த நீதிமன்றம், இந்த வழக்கில் உண்மைக்கு முகாந்திரம் இல்லை என்று கூறி தனுஷிற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தனர். இதன் மூலம், நீண்ட நாட்களாக தலைவலி கொடுத்திருந்த இந்த பிரச்சனையில் இருந்து தனுஷிற்கு விடிவு கிடைத்துள்ளது. 

No comments:

Post a Comment