I Don't Know Direction Says Actor Dhanush at Baahubali Audio Launch
I Don't Know Direction Says Actor Dhanush at Baahubali Audio Launch
எனக்கு டைரக்ஷன் தெரியாது - தனுஷ்
பாகுபலி 2 - படத்தின் இசை வெளியீட்டுவிழா சென்னையில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. படத்தின் இயக்குனர் ராஜமௌலி ,அனுஷ்கா,தமன்னா ,சத்யராஜ், நாசர், இசையமைப்பாளர் கீரவாணி உள்ளிட்ட படக்குழுவினரும் தனுஷ், யுவன் ஷங்கர் ராஜா ,விக்ரம்பிரபு உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டனர் .
'பாகுபலி 2' இசையை வெளியிட்டு பேசிய தனுஷ்... 'மும்பையிலிருந்து நேராக இந்த விழாவிற்கு வருகிறேன் . ஒரு படத்தில் கௌரவ தோற்றத்தில் நடித்துவருகிறேன். இப்போதைக்கு அங்கேயும் பாகுபலி 2 - படம் தான் பெரிதும் எதிர்பார்க்கும் படம். இந்திய அளவில் 'பாகுபலி' படத்திற்கு எந்த அளவுக்கு ஹைப் உருவாகியுள்ளது என்பதை நான் சொல்லத்தேவையில்லை.
கிட்டத்தட்ட 5 வருஷமா ஒரே படத்தை பண்ணுவதற்கு பெரிய கடின உழைப்பு வேணும். சின்னதா குட்டியா நாங்க ஒரு படம் எடுத்து வைத்திருக்கிறோம். இந்த மாதிரி படம் எடுத்தா பைத்தியம் பிடித்துவிடும். இந்த அளவுக்கு படமெடுப்பது சாதாரண விஷயமில்லை . இந்த குழுவிற்கு என்வாழ்த்துக்கள். டெக்னிக்களா இந்த படத்தை அனலைஸ் பண்ண முடியாது எனக்கு அந்த அளவுக்கு அறிவு இல்லை. அத்துடன் ராஜமௌலி டைரக்ஷன் பற்றி பேசும் அளவுக்கு எனக்கு டைரக்ஷன் தெரியாது.' அனைவரும் பாராட்டும்படியான ஒரு படமாக இது இருக்கும் என்றார் .
No comments:
Post a Comment