Tuesday, 11 April 2017

Income Tax Raids Continues in Radhika Sarathkumar's Radan Office

Income Tax Raids Continues in Radhika Sarathkumar's Radan Office
Income Tax Raids Continues in Radhika Sarathkumar's Radan Office
ராதிகா அலுவலகத்தில் ரெய்ட் !
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்வதற்காக சரத்குமார்  பணம் பெற்றார் என்கிற  தகவலின் அடிப்படையில்   சில நாட்களுக்கு முன்னர் கொட்டிவாக்கத்தில் உள்ள சரத்குமார் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிகாலையில் அதிரடி சோதனை நடத்தினர். பல மணி நேரம் நடந்த சோதனை குறித்து சரத்குமாருக்கு சம்மன் அனுப்பிய  நிலையில் வருமானவரி அலுவலகத்தில் ஆஜராகி அவர்  விளக்கமளித்தார்.
அதைத்தொடர்ந்து வருமானவரித்துறையினர் இன்று சென்னை.தி.நகர் ,பால்  அப்பாசாமி தெருவில் உள்ள ராதிகா சரத்குமாருக்கு  சொந்தமான 'ராடான் ' அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிறுவனத்தின் மூலம் தொலைக்காட்சி தொடர்களும் ,பல திரைப்படங்களும் எடுக்கப்பட்டு வருகிறது.
முன்னதாக கொட்டிவாக்கத்தில் நடந்த சோதனையின் தனது   மனைவி ராதிகா குளித்துக்கொண்டிருந்தபோது வருமானவரித்துறையினர் அத்து மீறியதாக குற்றம் சுமத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment