Tamil Nadu Farmers Shed Clothes Outside PMO in Delhi Protest
Tamil Nadu Farmers Shed Clothes Outside PMO in Delhi Protest
விவசாயிகள்
நிர்வாண போராட்டம்
டெல்லி
ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த 28 நாட்களாக தேசிய தென்னிந்திய நதிகள்
இணைப்பு விசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு
தலைமையில் தமிழக விவசாயிகள் போராடி
வருகின்றனர். காவிரி மேலாண்மைவாரியம்,பயிர்க்கடன்
தள்ளுபடி உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் தொடர்சசியாக பிரதமர்
அலுவலகம் முன்பு முழு நிர்வாண
போராட்டத்தில் குத்தித்து நாடு முழுவதும் அதிர்வலையை
ஏற்படுத்தினர் .இதை சற்றும் எதிர்பார்க்காத
காவல்துறையினர் சில நிமிடங்களுக்குள் சுதாரித்துக்கொண்டு
அவர்களை கைது செய்து அப்புறப்படுத்தினர்
.
இது குறித்த செய்திகள் தெரிவிப்பதாவது..
அய்யாக்கண்ணு தலைமையில், பிரதமர்
அலுவலகத்தின் முன்பு போராடிக்கொண்டிருக்கும்போது பிரதமர் சந்திப்பதாக அதிகாரிகள் கூறியதாகவும் பின்னர் அது மறுக்கப்பட்டகவும்
தெரிவித்ததால் ஏற்பட்ட விரக்தியின் காரணமாக
நிர்வாண போராட்டத்தில் ஈடுபடும் நிலைக்கு தள்ளப்பட்டதாக
கூறுப்படுகிறது.
No comments:
Post a Comment