Monday 3 April 2017

Truth Behind the Rajini's Visit to his Fans | Revealed

Truth Behind the Rajini's Visit to his Fans | Revealed
Truth Behind the Rajini's Visit to his Fans | Revealed 
ரஜினி, ரசிகர்களை சந்திக்கும் மர்மம் என்ன?
ரஜினி  ஒவ்வொரு படத்தின்போதும் தனது   ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வது வழக்கம்.அதன் மூலம்  ரசிகர்கள் பட வெளியீட்டின்  போது உற்சாகமாக ஸ்டார் மற்றும் தோரணங்கள் கட்டி தியேட்டரை திருவிழா கோலமாக மாற்றிவிடுவார்கள். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் வரை இருந்து வந்த பழக்கம் கைவிடபட்டது. அதன் பின்னர் ஒவ்வொரு பட வெளியீட்டின் போதும் ரஜினி அரசியலில் ஈடுபடபோவதாக செய்திகள் வர ரசிகர்கள் உற்சாகமிகுதியில் தீவிரமாக செயல் பட ஆரம்பித்தனர் அதன் பிறகு ரஜினியிடமிருந்து  எந்த விதமான அறிக்கையோ ,செய்தியோ வராது .அப்படியே  வந்தாலும் பூடகமாகத்தான் இருக்கும் .
இந்நிலையில் ரஜினி  நடிக்கும்  2.0 படத்தை தயாரிக்கும் 'லைகா' நிறுவனம் இலங்கையில் போர் நடந்த பகுதிகளில் வீடுகளை இழந்த தமிழர்களுக்கு புதிதாக  வீடுகளை  கட்டியது. இதை பாதிக்கப்பட் ட  தமிழர்களுக்கு கொடுப்பதற்காக ரஜினி இலங்கைக்கு அழைக்கப்படடார். இதற்கு திருமாவளவன் ,வேல்முருகன் உள்ளிட்ட பல கட் சித்தலைவர்கள்  கடுமையாக எதிர்த்தனர் . இதனால் ரஜினி தனது பயணத்தை  ரத்து செய்து ஒரு அறிக்கையை வெளியிட்டார்.அதில் இன்னொரு முறை  புனிதப்போர் நடந்த மண்ணை  தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தால் அதை தரிசிக்க விடாமல் செய்து விடாதீர்கள் என்றும் அரசியல் ஆக்காதீர்கள் என்றும் கூ றியிருந்தார்  .
இந்த சம்பவத்திற்கு பின்னர் தான் ரசிகர்களை மாவட்ட வாரியாக சந்திக்கவும் போட்டோ  எடுத்து கொள்ளவும் ரசிகர்களை அழைத்தது அரசியல் ரீதியாக பார்க்கப்படுகிறது.சோர்ந்துபோன ரசிகர்களை உற்சாகப்படுத்தி ஒன்று திரட்டும் முயற்சியில் இறங்கியுள்ள ரஜினி 2.0 படத்தின் வெளியீட்டின் போதோ அல்லது அதற்கு முன்னதாகவோ  இலங்கைக்கு செல்வார் எனவும், ரசிகர் மன்ற  மாவட்ட த்தலைவர்கள் தொடர்ந்து  அரசியலுக்கு வருமாறு வற்புறுத்தி வருவதாலும் தற்போதைய  அரசியல் சூழல்   சாதமாகமாக இருப்பதாலும்   அரசியலில் ரஜினி  ஈடுபடுவார் எனவும் கருதப்படுகிறது. இருப்பினும் ரசிகர்களில் ஒரு பகுதியினர் 2.0 படத்திற்கான விளம்பரத்திற்காகவே இந்த  மாவடட ரீதியிலான இந்த  சந்த்திப்பு  என்கின்றனர். ரஜினி அரசியலில் ஈடுபடுவாரா, இல்லையா என்பதை பொறுத்திருந்து தான்  பார்க்கவேண்டும் 

No comments:

Post a Comment