Thursday, 30 March 2017

Actor Rajini and Kamal inaugurated Nadigar Sangam new building foundation stone laying function

Actor Rajini and Kamal inaugurated Nadigar Sangam new building foundation stone laying function

நடிகர் சங்கத்திற்கான புதிய கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழா இன்று நடிகர் சங்க வளாகத்தில் நடைபெற்றது. சுமார் 1 ஏக்கர் பரப்பளவில் 26 கோடி ரூபாய் செலவில் கட்டிடம் அமைக்கப்படவுள்ளது. இந்த கட்டிடம் 4 அடுக்குகளைக் கொண்ட நவீன வசதிகளுடன், ஜிம்,பிரிவியூ தியேட்டர், கல்யாணமண்டபம் ,பெரிய அரங்கு, நடிப்பு பயிற்ச்சி அளிக்கும் அரங்கு என அமையவிருக்கிறது. இந்த கட்டிடத்தின் மூலம் வரும் வாடகை 50 லட்சம் வரை எதிர்பார்க்கப்படுகிறது. கார்த்தி ,விஷால் இருவரும் தங்களது பங்களிப்பாக 10 கோடி ரூபாய் கொடுக்கவுள்ளனர்.
இன்று காலை 9 மணியளவில் தொடங்கிய அடிக்கல் நாட்டு விழாவை நடிகர் சங்கத் தலைவர் நாசர், செயலாளர் விஷால், பொன்வண்ணன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். நடிகர் சங்கத்தின் பொருளாளர் கார்த்தி ராஜஸ்தானில் படப்பிடிப்பில் இருப்பதால் அவர்  ஸ்கைப் மூலம் கலந்து கொண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார்.
ரஜினி, கமல் இருவரும் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment