Monday, 27 March 2017

Vadivelu hopes for Vijay's next movie | தளபதி 61 நம்பி காத்திருக்கும் வடிவேலு

Vadivelu hopes for Vijay's next movie | தளபதி 61 நம்பி காத்திருக்கும் வடிவேலு

காமெடி நடிகர் வடிவேலு தன்னுடைய காமெடியால் தமிழ் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தவர். இம்சை அரசன் 23-ம் புலிகேசி படம் மூலம் ஹீரோவாக நடித்து பெரும் வெற்றி பெற்றார். அதன் பிறகு ஏற்பட்ட சில அரசியல் மாற்றங்களால் திரைப்படங்களில் இருந்தது கிட்டத்தட்ட 5 வருடங்கள் ஒதுங்கியே இருந்தார். 

மீண்டும், எலி படம் மூலம் ஹீரோவாக ரீ -என்ட்ரி ஆனா வடிவேலுவுக்கு அந்தப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியைக்  கொடுக்கவில்லை. அதன் பிறகு பழையபடி காமெடியனாகவே கத்தி சண்டை படத்தில் நடித்தார். அந்த படம் தன்னுடைய மார்க்கெட்டை மீண்டும் கொடுக்கும் என நம்பி இருந்த வடிவேலுவுக்கு அதிர்ச்சியே  காத்திருந்தது. கத்தி சண்டை படம் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை. நம்பிக்கை தரும் விதமாக தளபதி 61-இல் ஒப்பந்தம் ஆனார். 

அட்லீ இயக்கத்தில் மீண்டும் விஜய் நடிக்கும் தளபதி 61-ல் காமெடியில் பட்டையைக் கிளப்பி இருக்கிறாராம் வடிவேலு. விஜய் - அட்லீ ஜோடி ஏற்கெனவே தேறி எனும் மாபெரும் ஹிட்டைக் கொடுத்து உள்ளதால் தளபதி 61பெரும் வெற்றி பெரும் என நம்பிக்கையாக தன் சகாக்களிடம் சொல்லி வருகிறாராம் வைகைப்புயல் வடிவேலு. இதுமட்டுமல்லாமல் இம்சை அரசன் 23-ம் புலிகேசி-2, நீயும் நானும் நடுவுல பேயும் போன்ற படங்களிலும் நடித்துவருகிறார் நடிகர் வடிவேலு.
Veteran comedian Vadivelu’s much-hyped psychiatrist role in director Suraj’s Kaththi Sandai failed to impress his fans. The actor is now pinning high hopes on Thalapathy 61 with director Atlee. “Vadivelu plays a full-fledged character, he will join the team in April”, says a source close to the team. Vadivelu is also busy with the story discussion of Imsai Arasan 23am Pulikesi 2 with director Chimbu Devan. 

Apart from the two projects, the ace comedian has also signed a horror comedy titled ‘Neeyum Naanum Naduvula Peyum’ with Ivanuku Thannila Gandam director S.N. Shaktivel. Touted to be a kids-friendly horror film like Ghostbusters, the film also has actor RKay of Avan Ivan and Azhagar Malai fame in an important role

No comments:

Post a Comment