Wednesday, 29 March 2017

Aparna Balamurali marks her Tamil debut through ‘8 THOTTAKKAL’

Aparna Balamurali marks her Tamil debut through ‘8 THOTTAKKAL’

Whether it may be the teaser or it may be the scintillating songs, it has to be said that the film ‘8 THOTTAKKAL’ is gradually increasing the expectation level of the Audience, especially when the rhythmic master Yuvanshankar Raj has bagged the musical rights of the film. It is a must to say that the mind blowing promotional strategies for the film is creating waves in all over Tamilnadu.  Produced by M. Vellapandiyan under the banner ‘Vetrivel Saravana cinemas’ jointly with I B karthikeyan of ‘BIGPRINT Pictures’, the new-age -cop thriller ‘8 Thottakkal’ is directed by debutante Sri Ganesh, former assistant of Director Mysskin. The sharp-edged  ‘8Thottakkal’ that has debutante Vetri and Aparna Balamurali of ‘Maheshinte Prathikaaram’ fame in the lead will be released on April 7th by Sakthivel under the banner ‘Sakthivel Film Factory’. 
 
“I am very much happy to step into the Tamil film industry through ‘8 Thottakkal’, which is well built up by a young and energetic team. I play as a Journalist named Meera Vasudevan, who wants to live independently.  Our Hero is a very silent person and I am the one who will be moving friendly with him during his bad times.  But my character not stops here; it moves in a different track which will be far away from the Audience’s expectations. Apart from acting, I have sung a song too called ‘Manipaaya’, composed by KS Sundaramurthy, and I am glad to know that the song is receiving positive comments from the Audience” says Aparna Balamurali, the female lead of ‘8 THOTTAKKAL’ enthusiastically.
 
'8 தோட்டாக்கள்' படத்தின் மூலம்  தமிழ் திரையுலகில்  கதாநாயகியாக அடியெடுத்து வைக்கிறார்  அபர்ணா பாலமுரளி 
 
 
'வெற்றிவேல் சரவணா சினிமாஸ்' சார்பில் எம். வெள்ளைப்பாண்டியன்  மற்றும்  'பிக் பிரிண்ட்  பிச்சர்ஸ்'  -  ஐ பி கார்த்திகேயன் இணைந்து தயாரித்து இருக்கும்   திரைப்படம் '8  தோட்டாக்கள்'.  இயக்குநர் மிஷ்கினின் உதவியாளரான ஸ்ரீ கணேஷ் இயக்கி வரும்  '8தோட்டாக்கள்' படத்தில் புதுமுகம் வெற்றி மற்றும் அபர்ணா பாலமுரளி (மலையாள திரைப்படம்  'மஹேஷிந்தெ பிரதிகாரம்' புகழ்) முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. பிரம்மாண்ட விளம்பர யுக்திகளால், ஒட்டுமொத்த தமிழக  ரசிகர்களின்  எதிர்பார்ப்பையும் அதிகரித்து இருக்கும் '8 தோட்டாக்கள்' படத்தை, வருகின்ற ஏப்ரல் 7 ஆம் தேதி அன்று 'சக்திவேல் பிலிம் பேக்டரி' சார்பில்   வெளியிடுகிறார்  சக்திவேல். 
 
"முழுக்க முழுக்க இளமையான திறமையாளர்களை கொண்டு உருவான இந்த 8 தோட்டாக்கள் திரைப்படம் மூலம் நான் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைப்பது எனக்கு அளவுகடந்த மகிழ்ச்சியாக இருக்கின்றது. மீரா வாசுதேவன் என்கின்ற ஒரு பத்திரிக்கையாளர் கதாபாத்திரத்தில் நான் இந்த 8 தோட்டாக்கள் படத்தில் நடித்து இருக்கின்றேன்.  எப்போதும் சாந்தமாக இருக்கும் இந்த படத்தின் கதாநாயகனுக்கு இருக்கும் ஒரே நட்புறவு நான் தான். ஆனால் ஒருபுறம் நட்புறவோடு இருந்தாலும், மறுபுறம் வேறொரு திசையை நோக்கி என்னுடைய கதாபாத்திரம் பயணிக்கும். 8 தோட்டாக்கள் படத்திற்காக கே எஸ் சுந்தரமூர்த்தி இசையமைத்து இருக்கும் மன்னிப்பாயா பாடலை நான் பாடி இருக்கிறேன். ரசிகர்கள் மத்தியில்  இந்த பாடல் நல்ல வரவேற்பை பெற்று வருவது எனக்கு மேலும் மகிழ்ச்சியாக இருக்கின்றது." என்று உற்சாகமாக கூறுகிறார் '8 தோட்டாக்கள்' படத்தின் கதாநாயகி அபர்ணா பாலமுரளி.⁠⁠⁠⁠

No comments:

Post a Comment