Monday, 27 March 2017

Is Mani's Kaatru Veliyidai a remake of Roja?

Is Mani's Kaatru Veliyidai a remake of Roja?
Is Mani's Kaatru Veliyidai a remake of Roja?
Director  Mani Ratnam's next movie Kaatru Veliyidai has his former assistant and actor Karthi in the lead role. AR Rahman has scored music for the film and all the songs have been getting great response. The film is slated to release on April 7.British Board of Film Classification has recently passed Mani Ratnam's Kaatru Veliyidai with 12A certificate. 
In their official website, they have also posted the summary of the film, which read, "Kaatru Veliyidai is a Tamil language romantic drama in which a military pilot, being held as a prisoner of war, remembers his romance with a local doctor". Already, a section of media have reported the film has heavy resemblance to Mani Ratnam's yesteryear hit Roja and now this storyline only reconfirms the buzz. Karthi plays officer VC, a fighter pilot and Aditi Rao Hydari plays a doctor in the film.
காற்று வெளியிடை- ரீமேக்கா?
இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் அவரது முன்னாள் அசிஸ்டென்ட் நடிகர் கார்த்தி நடித்திருக்கும் திரைப்படம் காற்று வெளியிடை. ஏ.ஆர்.ரகுமான் இசையில் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் மெகா ஹிட்டாகி உள்ளன.  அடுத்த மாதம் வெளியாகும் உள்ள இத்திரைப்படத்திற்கு எதிர்பார்ப்புகள் எகிறிக் கிடக்கின்றன. ரிலீசுக்குத் தயாராகிவரும் படத்தின் தணிக்கை சான்றிதழ் பெறும் பணியும் முடிவடைந்துள்ளது. 

இந்தியாவில் ரிலீசாகும் அன்றைக்கே உலகெங்கும் ரிலீஸ் ஆக உள்ளது காற்று வெளியிடை. இங்கிலாந்து நாட்டில் தணிக்கை செய்யப்பட்ட இந்த படத்திற்கு 12A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பிரிட்டிஷ் தணிக்கை துறை தங்களது வலை தளத்தில்  காற்று வெளியிடை படத்தின் கதைச் சுருக்கத்தை வெளியிட்டுள்ளனர். போரில் பணயக் கைதியாக பிடிக்கப்பட்டிருக்கும் விமானி தன்னுடைய மருத்துவக் காதலியை நினைத்துப் பார்க்கும் தமிழ்ப்படம் என்று குறிப்பிட்டுள்ளனர். 

இந்த கதைச் சுருக்கத்தை கவனிக்கும்போது நமக்கு நினைவுக்கு வருவது மணிரத்னத்தின் ரோஜா திரைப்படம் தான். அதிலும் இதே போன்ற கதைக்களத்தை தான் தேர்வு செய்திருப்பார் மணிரத்னம். எனவே, தன்னுடைய ரோஜா படத்தையே ரீமேக் செய்துள்ளாரா மணிரத்னம் என பலரும் சிந்தித்து வருகின்றனர். ஆனால், ரோஜா போன்று கதை இருந்தாலும் நிச்சயம் காற்று வெளியிடை வேறு கோணத்தில் இருக்கும் என்று நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர் மணியின் தீவிர ரசிகர்கள். 

No comments:

Post a Comment