Thursday, 30 March 2017

Producer Harassing behavior with Actress Varalaxmi Sarathkumar

Producer Harassing behavior with Actress Varalaxmi Sarathkumar


சமுத்திரக்கனி இயக்கி நடித்து அனைவராலும் பாராட்டு பெற்ற படம் ‘அப்பா’. தம்பி ராமையா, நமோ நாராயணா, வினோதினி, நசாத் உட்பட பலர் நடித்திருந்தனர். இளையராஜா இசை அமைத்திருந்தார்.
இப்படம் தற்போது மலையாளத்தில் ‘ஆகாச மிட்டாயி’ என்ற பெயரில் உருவாகவுள்ளது. இந்தப்படத்தில் ஜெயராம் கதாநாயகனாகவும் அவருக்கு ஜோடியாக வரலட்சுமி சரத்குமார் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஏப்ரல் 1 ஆம் தேதியிலிருந்து இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதாக இருந்தது. இந்நிலையில் ‘ஆகாச மிட்டாயி’ படத்தை தயாரிக்கும் சுதேவ், வரலட்சுமி சரத்குமார் இந்தப்படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.
இது குறித்து வரலட்சுமி சரத்குமார் கூறியதாவது.. ‘இப்டத்தில் நடிக்க சமுத்திரக்கனி என்னை அழைத்தவுடன் சம்மதித்தேன். அவருடைய படங்கள் எனக்கு பிடிக்கும். தயாரிப்பாளரின் ஆணாதிக்க போக்கு எனக்கு பிடிக்கவில்லை அதனால் நானாக தான் விலகியுள்ளேன். இது குறித்து ஜெயாரமிடமும், இயக்குனர் சமுத்திரக்கனியுடனும் பேசி சுமூகமான முறையிலேயே விலகியுள்ளேன்.’ என்றார்.
வரலட்சுமி சரத்குமார் நடிக்கவுள்ள கதாபாத்திரத்தில் முன்னர் பரிசீலிக்கப்பட்ட ‘பாபாநாசம்’ ஆஷாசரத்தே நடிக்கவுள்ளார்.


No comments:

Post a Comment