Friday, 31 March 2017

Amy Jackson's new movie against Jallikattu | எமி ஜாக்சனின் புதிய படம் ஜல்லிக்கட்டுக்கு எதிரானதா?

Amy Jackson's new movie against Jallikattu | எமி ஜாக்சனின் புதிய படம் ஜல்லிக்கட்டுக்கு எதிரானதா?
நடிகை எமி ஜாக்சன் தற்போது தயாரிப்பாளராய் புதிய அவதாரம் எடுத்துள்ளார். ஆனால், அவர் எடுக்கப் போவது குறும்படம் அதுவும் ஆங்கிலத்தில். விலங்கு நல ஆர்வலரான எமி எடுப்பது மிருக வதை பற்றிய விழுப்புணர்வை ஏற்படுத்த தானாம்.  "மிருகவதை மிகவும் கொடிய விஷயம், அதை தடுக்கவே இந்த படத்தை எடுக்க இருக்கிறேன். என் நண்பர்களுடன் சேர்ந்து இந்த படத்தை நான் எடுக்கிறேன் இருந்தாலும், இந்த படத்தில் நான் நடிக்க மாட்டேன். படத்தின் உண்மைக் கதைகள் பல இருக்கும். விரைவில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ளது." என கூறியுள்ளார் எமி ஜாக்சன்.
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை, சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் எந்திரனின் அடுத்த பாகமான 2.0 திரைப்படத்தில் மீண்டும் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடித்து முடித்திருக்கிறார் எமி. அடுத்தபடியாக விஜய் சேதுபதியுடன் ஒரு படத்தில் நடிக்க பேச்சுவார்த்தையில் உள்ளார். பிறகு பிரிட்டிஷ் இயக்குனர் ஆன்டி மொராஹன் இயக்கும் ஒரு ஆங்கில படத்தில் நடிக்க உள்ளார் எமி. குறும்படம் எடுக்கப் போறேன்னு கிளம்பி இருக்கும் எமி, பீட்டாவின் ஆதரவாளர் ஆவர். மிருகவதை எனக் கூறிக் கொண்டு ஜல்லிக்கட்டு பற்றி தவறான செய்திகள் இந்த குறும்படத்தில் இடம் பெறலாம் என தமிழக சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். ஒருவேளை அப்படி இருந்தால், அது நிச்சயம் தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தும். 
Amy Jackson is currently producing a short film with her friend to create awareness on the cruelty towards animals and its preventive measures. “We will shoot for the film soon. I will also be a part of it, though I won’t act in the film. I will be speaking about my experience of making the movie. It will have a few real stories. I believe that cruelty to animals is a serious issue and it’s important that it’s discussed more”, said Amy Jackson in her statement. 
In Kollywood, Amy has Superstar Rajinikanth and Akshay Kumar’s magnum opus ‘2.O’, which is all set to release for this Diwali. The actress is in talks for a movie with Vijay Sethupathi but nothing has been officially confirmed yet. Social activist have raised concerns that Amy's short film might portray jallikattu in wrong was as the actress is the supporter of PeTA.C

No comments:

Post a Comment