Tuesday, 28 March 2017

Endhiran 2.0 to have an IMAX release.

Endhiran 2.0 to have an IMAX release.
Endhiran 2.0 to have an IMAX release.
Superstar Rajni's casting in gigantic director Shankar's Endhiran 2.0 preparing for the great productions. Having almost completed the shooting of the film, the film has become the beginning of the post production and graphics jobs. In the latest update is besides the regular 2D and 3D versions, Superstar Rajinikanth and Akshay Kumar’s Endhiran 2.0 will also have an IMAX release. IMAX is the most widely used system for special-venue film presentations. “From the beginning, director Shankar and cinematographer Nirav Shah are particular in delivering never seen before cinematic experience for Indian audiences, the film will have excellent visual and sound quality”, said a source close to the team. 
“Several theaters including ‘Kasi’(Chennai) are under renovation with latest projection and sound equipment for Endhiran 2.0”, added the source. Lyca Productions is bankrolling the film at a whopping budget of RS 350cr, AR Rahman is scoring the music for the film and the makers are planning to hold a grand audio launch in June.
ஐமேக்ஸில் ரிலீஸ் ஆகும் எந்திரன் 2.0
திரைப்படங்களை நாம் டென்ட் கொட்டாயில் இருந்து பார்த்து வருகிறோம். தற்போது 7.1 ஆடியோ, பெரிய திரை என நம் திரை அரங்கங்கள் வளர்ந்து விட்டாலும் திரைப்படத்தை உயிரோட்டமாக பார்க்கும் தொழில்நுட்பம் கொண்டது ஐமேக்ஸ் தான். சாதாரண திரையை விட, நான்கு மடங்கு பெரிய திரையைக் கொண்டவை  ஐமேக்ஸ் திரை அரங்கங்கள். அதனால், படத்தை தியேட்டரில் எந்த மூலையில் இருந்து பார்த்தாலும் படத்தின் உள்ளேயே ரசிகர்களும் இருப்பது போன்ற பிரமையை ஏற்படுத்தும். ஐமேக்ஸில் திரையிட படத்தை அதற்கென பிரத்தியேக கேமரா கொண்டு படமாக்கப்பட வேண்டும். 

சூப்பர் ஸ்டார் நடிப்பில், பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் மிகுந்த பொருட்செலவில் தயாராகிவரும் திரைப்படம் எந்திரனின் இரண்டாம் பாகமான 2.0. படத்தினையும்  ஐமேக்ஸில் வெளியிட திட்டமிட்டுள்ளாராம் இயக்குனர் ஷங்கர். படத்தின் ஷூட்டிங் தொடங்கியதில் இருந்தே இயக்குனர் ஷங்கரும், ஒளிப்பதிவாளர் நீரவ் ஷாவும் ரசிகர்களுக்கு எந்திரன் 2.0 மூலம் புதிய அனுபவத்தை தர முடிவு செய்திருந்தார்கள். அதற்க்காக, அதி அற்புத ஒளி, ஒலி தரத்துடன் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றன.

இதற்காக பல திரை அங்கங்களும் தங்களின் புரொஜெக்டர், ஒளி அமைப்பு உள்ளிட்டவைகளை தரம் உயர்த்தி வருகின்றன. சென்னையில் புகழ் பெற்ற காசி தியேட்டர் எந்திரன் 2.0 வை ரிலீஸ் செய்யும் வகையில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.  எந்திரன் 2.0 படத்தில் சூப்பர் ஸ்டாருடன் நடிகை எமி ஜாக்சன் நடிக்கிறார். படம் இந்தியிலும் தயாராவதால், இந்தி முன்னணி நடிகரான அக்ஷய் குமார் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த பிரம்மாண்ட படத்தை லைக்கா புரொடக்க்ஷன்ஸ் 350 கோடி ரூபாய் செலவில் தயாரித்துள்ளனர்.

No comments:

Post a Comment