Thursday, 23 March 2017

Super Star Rajni To Visit Jaffna, Sri Lanka | இலங்கை செல்லும் சூப்பர் ஸ்டார் ரஜினி

Super Star Rajni To Visit Jaffna, Sri Lanka | இலங்கை செல்லும் சூப்பர் ஸ்டார் ரஜினி

சூப்பர் ஸ்டார் ரஜினி தன்னுடைய எந்திரன் 2.0 பட இறுதி வேளைகளில் பிசியாக இருந்தாலும் முக்கியமான போது நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு வருகிறார். தற்போது அவர் அடுத்த மாதம் இலங்கை செல்ல உள்ளதாக அதிகாரப் பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆனால், அவர் இலங்கை செல்வது படப்பிடிப்புக்கோ, ஓய்வெடுக்கவோ அல்ல என்பதே ஆச்சர்யமான விஷயம்.
எந்திரன் 2.0 படத்தை தயாரிக்கும் லைக்கா நிறுவனம் நடத்தி வரும் ஞானம் அறக்கட்டளை மூலமாக இலங்கை வாழ் தமிழர்களுக்கு 150 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அந்த வீடுகளை வழங்கும் நிகழ்ச்சி அடுத்த மாதம் 9ஆம் தேதி யாழ்ப்பாணத்தில் நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவே சூப்பர் ஸ்டார் ரஜினி இலங்கை  செல்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் இலங்கையின் வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனும் பங்கேற்கிறார். கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினி இலங்கை செல்ல இருப்பதால், அந்த விழாவை பிரம்மாண்டமாக கொண்டாட விழா ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டுள்ளனர். 
Superstar Rajinikanth is currently busy with 2.0, which is in final phase. Rajni will be inaugurating 150 free homes to Sri Lankan Tamils, constructed by Gnanam Foundation, part of Lyca Productions, who are producing the actor’s mega budget sci-fi action entertainer 2.0.
The event will also be attended by Chief Minister Vigneshwaran and leading politicians of Sri Lanka.  According to the official press statement issued by Lyca Productions, the event will be happening on April 9 in Jaffna, Sri Lanka. Our source also adds “Rajinikanth had earlier visited Sri Lanka in the late ‘80s. Now after three decades, he will be meeting his fans and Tamils in the country. The organizers are planning a grand event.”

No comments:

Post a Comment