Monday, 27 March 2017

Film industry mourns with KV Anand and Soori | தந்தை மரணம், துக்கத்தில் கே.வி.ஆனந்த் மற்றும் சூரி !

Film industry mourns with KV Anand and Soori | தந்தை மரணம், துக்கத்தில் கே.வி.ஆனந்த் மற்றும் சூரி !


அடுத்தடுத்து இரண்டு சினிமா பிரபலங்களின் தந்தைகள் இறந்ததால் அதிர்ச்சியிலும் வேதனையிலும் உள்ளது தமிழ் சினிமா உலகம். நகைச்சுவை நடிகர் சூரியின் தந்தை ஆர்.முத்துசாமி, 75 வயதுமிக்க அவர் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று  இரவு 10 மணியளவில் காலமானார். அவரது உடல் இறுதி அஞ்சலிக்காக சொந்த ஊரான மதுரை மாவட்டம், ஒத்தக்கடை தாமரைப்பட்டி அருகே உள்ள ராஜாக்கூரில் வைக்கப்பட்டிருக்கிறது. இன்று மாலை 4 மணிக்கு இறுதிச்சடங்கு நடக்கிறது. 
இயக்குனர் கே.வி.ஆனந்தின் தந்தை  கே.எம்.வேங்கடேசன் அவர்களும் இன்று காலை உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் காலமானார். தற்போது 74 வயதாகும் கே.எம்.வேங்கடேசன் அவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இயக்குனர் கே.வி.ஆனந்தின் திரைப்படமான கவண் இந்த வாரம் வெளிவர உள்ள நிலையில் அவரது தந்தை மறைந்திருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. இயக்குனர் கே.வி.ஆனந்த் மற்றும் நடிகர் சூரி அவர்களுக்கு நமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். 
Film industry is shocked after knowing the demise of two leading stars' fathers. KV Anand’s dad K M Venkatesan (74) had passed away at a private hospital in Chennai due to age-related ailments. Sources say that the cremation will be happening today. Another sad news is that last night, comedy actor Soori’s dad R Muthusamy (75) passed away in Rasakoor, near Othakadai. 

We register our heartfelt condolences to director KV Anand and Soori, the former’s Kavan is all set to release this Friday and we only pray God to give him the much-needed strength.

No comments:

Post a Comment