Monday, 27 March 2017

Surriya's TSK team celebrates actor Senthil's birthday | தானா சேர்ந்த கூட்டத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் செந்தில்

Surriya's TSK team celebrates actor Senthil's birthday | தானா சேர்ந்த கூட்டத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் செந்தில்
தமிழ் சினிமாவின் எவர்கிரீன் காமெடி ஜோடி என்றால் அது கவுண்டமணி செந்தில் தான். அப்படி புகழ்பெற்ற நடிகர் செந்தில் தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா ஹீரோவாக நடிக்கும் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் காமெடி ரோலில் நடிக்கிறார். 

சமீபத்தில், தன்னுடைய பிறந்தநாளை தானா சேர்ந்த கூட்டம் பட குழுவினரோடு கொண்டாடி மகிழ்ந்தார் நடிகர் செந்தில். பிறந்த நாள் கேக்கை வித்தியாசமாக வடிமைத்திருந்தனர்,  கவுண்டமணி-செந்தில் இணையின் மறக்க முடியாத காமெடியான வாழைப்பழ காமெடியை ஞாபகப்படுத்தும் வண்ணம் இரண்டு வாழைப்பழங்கள் போன்று கேக் இருந்தது. இந்த கொண்டாட்டத்தில் நடிகர் சூர்யா, நடிகை கீர்த்தி சுரேஷ், இயக்குனர் விக்னேஷ் சிவன்  உள்ளிட்டோர் கலந்துகொண்டு செந்தில் அவர்களுக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
தானா சேர்ந்த கூட்டம் படத்தின் 85 சதவீதப் பணிகள் முடிவடைந்துவிட்டது. இன்னும் ஒருமாதத்தில் படப்பிடிப்புகள் நிறைவு பெருமாம். நடிகர் சூர்யா, நடிகை கீர்த்தி சுரேஷ் உடன் நடிகை ராமயா கிருஷ்ணனும் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறாராம்.  
Suriya’'s Thaanaa Serndha Koottam team have celebrated  legendary comedy actor Senthil's birthday on the sets . The team ordered a unique cake with a pair of bananas on the top reminding the famous comedy scene of Senthil and Goundamani from Karakataaran. 

Along with the film’s director Vignesh Shivan, Suriya and Keerthy Suresh were also present during the birthday celebration. Sources say that nearly 85% of the shoot has been completed and the team will be wrapping up the film by next month. Produced by Gnanavel Raja’s Studio Green, Anirudh Ravichander is scoring the music for the film, which also has Ramya Krishnan in an important role.

No comments:

Post a Comment