Super Star To be Brand Ambassador Of Malacca | மலேசியா நாட்டு சுற்றுலா தூதர் ஆவாரா சூப்பர் ஸ்டார் ரஜினி
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைப்படத் துறையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வந்தாலும் பெரிதாக எந்த விளம்பரத்திலும் நடித்ததில்லை. உலகின் பெரும் நிறுவங்கள் பலவும் கோடிகளைக் கொட்டிக் கொடுக்கத் தயாராக இருந்த போதும் விளம்பரங்களின் பக்கம் சூப்பர் ஸ்டாரின் கவனம் சென்றதில்லை. ஆனால், தமிழக அரசின் கண் தானம் குறித்த விளம்பரத்திலும், தேர்தல் ஆணையத்தின் விளம்பர படத்திலும் சம்பளம் வாங்காமல் தோன்றினார்.
மலேசியா நாட்டில் உள்ள மலாக்கா மாநிலம் தங்களது நாட்டு சுற்றுலாவை மேம்படுத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தங்களது சுற்றுலா தூதராக நியமிக்க விரும்புகிறதாம். கடந்த ஆண்டு, ரஜினியின் மாபெரும் ஹிட்டான கபாலி திரைப்படம் பெரும்பாலும் மலாக்காவில் தான் படம்பிடிக்கப்பட்டது. இது குறித்த வேண்டுகோளை ரஜினியிடம் தெரிவித்துள்ளனர் மலாக்கா அரசு அதிகாரிகள். இது குறித்து எந்த முடிவையும் ரஜினி இதுவரை எடுக்கவில்லை. தங்களின் சுற்றுலா தூதுவராக ரஜினி ஒப்புக் கொள்ளும் பட்சத்தில், மலேசியாவின் சுற்றுலா மேலும் வளரும் என பலரும் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்னர், புதுச்சேரியின் ஆளுநர் கிரண் பேடி, சூப்பர் ஸ்டாரை தங்களது மாநில தூதராக நியமிக்க விரும்பினார், ஆனால் ரஜினி அதற்கு சம்மதிக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
Super Star Rajnikanth has been in the industry for more than four decades but he has never endorsed any major brands. Many big brands have approached super star to appear in their commercials, however Rajni had kept declining those multi-crore offers.
Last year, Super star was in Malaysia for the shooting of his blockbuster hit Kabaali. During the stay, Super star has met many government officials including the head of the state Malacca. Recently, Rajni was approached by Malacca officials to be their brand ambassador to boost their tourism. Super star is yet to decide on the offer. Earlier, Kiran Bedi wanted Rajni to be the brand ambassador of 'Prosperous Puducherry’ which the Super star didn't accept.
No comments:
Post a Comment