Thursday, 23 March 2017

Election Commission freezes two leaves symbol | இரட்டை இலை சின்னம் முடக்கம் தேர்தல் ஆணையம் அதிரடி

Election Commission freezes two leaves symbol | இரட்டை இலை சின்னம் முடக்கம் தேர்தல் ஆணையம் அதிரடி

அதிமுகவின் இரண்டு அணியினரின் மனுவையும் பரிசீலித்த தேர்தல் ஆணையம் நேற்று இரவு இரட்டை இலை சின்னம் யாருக்கும் இல்லை என அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 
நேற்றைக்கு இரு அணியினரையும் தங்களின் இறுதி வாதத்தை நேரில் எடுத்துரைக்க பணித்திருந்தது. இரண்டு தரப்பும் தற்போது தங்களின் வாதங்களை ஆணையம் முன்பு தராது வாதிட்டனர். இதன் முடிவில் இரண்டு தரப்பினரையும் அதிர்ச்சி அடைய செய்யும் அறிவிப்பை வெளியிட்டது தேர்தல் ஆணையம். எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகும் இதே போன்றதொரு பிளவில், அதிமுகவின் இரட்டை இலை சின்னம் முடக்கம் செய்யப்பட்டது. 28 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே வரலாறு திரும்பி உள்ளது.
வரவுள்ள ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் யார் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. தற்போது அதிமுக என்ற பெயரையே இரு அணியினரும் பயன்படுத்த தடை விதிக்கப் பட்டுள்ளது. மேலும், டி.டி.வி.தினகரனும், மதுசூதனும் என்னென்ன சின்னத்தில் போட்டி இடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு  எழுந்துள்ளது. இதே போன்றதொரு சூழ்நிலையில் 1989-ல் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு 30க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களை பெற்று எதிர்கட்சித் தலைவர் ஆனார். இரட்டை இலை சின்னத்தை முடக்கியதை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு நீதிமன்றத்தை அணுக உள்ளது.
The Election Commission has said it delivered a temporary verdict because there wasn't enough time to examine documents submitted by both sides and take a fair decision. Both the Panneerselvam and V.K. Sasikala factions of the AIADMK have expressed shock over the Election Commission's freezing the party's election symbol of two leaves and said that they would make all efforts to retrieve it.
Neither of the two groups led by the petitioners OPS group and the respondents Sasikala group shall be permitted to use the name of the party 'All India Anna Dravida Munnetra Kazhagam' simplicitor, the Commission said. Both the groups shall also be allotted such different symbols in RK Nagar byelection.

No comments:

Post a Comment