Wednesday, 12 April 2017

Abdul Dr.A.P.J. Youngsters Summit Award for Environmental and Innovations

Abdul Dr.A.P.J. Youngsters Summit Award for Environmental and Innovations
Abdul Dr.A.P.J. Youngsters Summit Award for Environmental and Innovations
Dr.A.P.J.அப்துல்கலாம் சுற்றுச்சூழல் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான விருதுஇளைஞர்கள் உச்சி மாநாடு
சென்னை மேற்கு தாம்பரம் ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி, தரமான பொறியியல் கல்வியை தருவதில் 20 வருடமாக முன்னிலையில் உள்ளது. இக்கல்லூரியின் சிறப்பு அம்சம் ஒவ்வொரு துறையும் தேசிய தர அங்கீகாரம் (NBA) பெற்றுள்ளது. தற்போது இந்திய மனிதவள மேம்பாட்டுத்துறை சார்பாக உயர்கல்வி நிறுவனங்களின் இந்திய அளவிலான தரவரிசை பட்டியலில் (NIRF) எங்கள் கல்லூரி வுழி 100 பொறியியல் கல்லூரிகளில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தரவரிசையில் சுமார் 40க்கும் மேற்பட்ட அரசு கல்வி நிறுவனங்களை சார்ந்த IITs,NITs,IISC,IIIT மற்றும் பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றிருக்கின்றது.
ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் 90 சதவீகித விழுக்காட்டுக்கு மேல் மாணவர்கள் பல்கலைக்கழகத் தேர்வில் தேர்ச்சி பெற்று வருகின்றனர் என்பது பெருமைக்குரிய விஷயமாகும். மேலும் இக்கல்லூரி இந்நாள் வரை 1054 அண்ணா பல்கலைக்கழக ரேங்குகளை பெற்று முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டிருக்கிறது. இதில் 29 தங்க மெடல்களும் அடங்கும். கடந்த 2015 – 2016 கல்வியாண்டில் 236 (5 தங்க மெடல்கள்) அதிக அளவில் பல்கலைக்கழக ரேங்க்குகளை பெற்று தமிழகத்திலேயே முதலிடத்தை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இக்கல்லூரி கடந்த 10 வருடமாக அண்ணா பல்கலைக்கழக தேர்வுகளுக்கான சதவிகித தரவரிசை பட்டியலில் முதல் 10 இடத்தை பெற்று சாதனையை செய்து கொண்டிருக்கிறது. கடந்த 5 வருடங்களாக எங்கள் கல்லூரி மாணவர்களின் வேலை வாய்ப்பு 90% மேல் தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களில் பணி நியமனங்களை பெற்று உள்ளனர் என்பது பெருமைக்குரிய விஷயமாகும்.
தற்போது, ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி மற்றும் ICT அகாடமி சென்னை, இணைந்து நடத்தும் Dr,A.P.J. அப்துல்கலாம் சுற்றுச்சூழல் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான விருது – 2017க்கான நிகழ்ச்சி ஏப்ரல் 8-ம் தேதி காலை 10.00 மணியளவில் லியோமுத்து உள்ளரங்கில் இனிதே துவங்கியது. இவ்விழாவில்  திரு. சாய்பிரகாஷ் லியோமுத்து தலைமை செயல் அதிகாரி, சாய்ராம் கல்வி குழுமம் வரவேற்புரை நிகழ்த்தினார். அவர் சாதனைகளையும் சமூக வளர்ச்சியில் ஸ்ரீ சாய்ராம் நிறுவனங்களின் பங்களிப்புக் குறித்தும் எடுத்துரைத்தார். சமூக பொறுப்புணர்வு அடிப்படையில் ஸ்ரீ சாய்ராம் கல்வி குழுமம் மாணவர்களின் திறமையை வெளிக் கொணர்வதற்கு பல்வேறு துறைகளின் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் இவ்விழா வடிவமைக்கப்பட்டது.
புதிய கண்டுபிடிப்புகளும் தொழில் முனைவோர்களும் ஒருங்கிணைந்து நாட்டின் தேவையை பூர்த்தி செய்வதின் மூலம் வளர்ச்சிப் பாதையில் பயணிக்க உதவிடும் என்றும் எடுத்துரைத்தார். புதிய அணுகுமுறையின் மூலம் அனைத்து வளங்களையும் ஒருங்கிணைத்து உரிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி நாட்டு மக்களின் வாழ்க்கை தரம் மேம்படுவதற்காக பயன்பட வேண்டும் என வலியுறுத்தினார். தூய்மையான சிந்தனைகள் புதிய படைப்புகளை உருவாக்கிட உதவும் என்றும் கூறினார். அப்துல்கலாம் சுற்றுச்சுழல் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான விருது – 2017க்கான போட்டியில் 3000 ஆய்வு கட்டுரைகள் பெறப்பட்டது.
இதில் விவசாயம், எரிசக்தி, சுற்றுச்சுழல் மற்றும் நீர்வள மேலாண்மை, உற்பத்தி, அடிப்படை கட்டமைப்பு ஆகிய பிரிவுகளில் பெறப்பட்டதுவல்லுநர்களின் மதிப்பீடு அடிப்படையில் 800 சிறந்த ஆய்வு கட்டுரைகள் தேர்வு செய்து கருத்து மற்றும் புதுமை சார்ந்த அணுகுமுறையின் அடிப்படையில் 100 ஆய்வு கட்டுரைகள் இறுதி போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டதுஇதில் விவசாயம், எரிசக்தி, நீர்வள மேலாண்மை மற்றும் சுற்றுச்சுழல், உற்பத்தி அடிப்படை கட்டமைப்பு ஆகிய பிரிவுகளில் தலா 20 சிறந்த ஆய்வு கட்டுரைகளை போட்டியாளர்கள் சமர்பித்தனர். கருத்து மற்றும் புதுமையின் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவிலும் 3 பரிசுகள் தேர்ந்தெடுக்கப்பட்டு மொத்தம் ரூபாய் 15,00,000 ரொக்கப் பரிசு நிறைவு விழாவில் வழங்கப்பட உள்ளது.
இவ்விழாவில் திரு.M.சிவக்குமார்,CEO, ICT அகாடமி கலந்து கொண்டு மாணவர்களின் பங்களிப்பு மற்றும் தேசிய வளர்ச்சி குறித்தும் இன்றைய சூழலில் புதிய கண்டுபிடிப்புகளின் இன்றியமையாமை குறித்து எடுத்துரைத்தார்மாணவர்களின் திறமையை முறைப்படுத்தி சரியான தளத்தில் வெளிக்கொணர்வதன் மூலம் வெற்றியாளர்களாகவும் இளைய தலைமுறையை நல்வழிப்படுத்துவதாக அமையும் என்று வலியுறுத்தினார்.
இவ்விழாவில் திரு.கனகராஜ், தலைவர், ஜெயா கல்வி குழுமம் கலந்து கொண்டு தொழிற்கல்வியின் இன்றியமையாமையும் சர்வதேச தரத்திற்கு ஏற்றவாறு மாணவர்கள் தங்களது திறன்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். இன்றைய மாணவர்கள் திறமை மிக்கவர்களாக விளங்குகின்றனர். ஆனால், அவர்களுக்கு தேவையான வழிகாட்டுதலை அனுபவமிக்கவர்களும் அரசம் இணைந்து வழங்குவதன் மூலம் வளர்ச்சியை துரிதப்படுத்த உதவும் என்று உரைத்தார்
இவ்விழாவில் திரு.R.S. முனிரத்தினம்ää தலைவர், சுயநிதி பொறியியல் கல்லூரிகள் கூட்டமைப்பு, கலந்து கொண்டு துவக்க உரையாற்றினார்மாணவர்கள் தங்களது திறனை மேம்படுத்திக்கொண்டு புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதின் மூலம் சமுதாய வளர்ச்சிக்கு உதவிட வேண்டும்இந்தியாவிலேயே கல்வித்துறையில் தமிழகம் தலைச்சிறந்த மாநிலமாக திகழ்கிறது என்றார். மேலும், அவர் குறிப்பிடுகையில் ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி சர்வதேச அளவில் மிகச்சிறந்த கல்லூரியாக விளங்குகிறது.
இவ்விழாவில் Dr.V.பொன்ராஜ், முன்னாள் ஆலோசகர், Dr.A.P.J. அப்துல்கலாம் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்மாணவர்கள் Dr.A.P.J. அப்துல்கலாம்  அவர்களின் எண்ணக்கனவை நிறைவேற்றும் வகையில் புதிய கண்டுபிடிப்புகளின் மூலம் சாதாரண மக்களின் வாழ்க்கை தரம் மேம்படுவதற்காக பாடுபட வேண்டும். மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்தும் வகையில் கல்லூரிகள் போதிய உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதன் மூலம் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கி பயன்பெறலாம்இளைஞர்களும் மாணவர்களும் ஒரு நாட்டின் மிகச்சிறந்த வளம் அதனை அரசும்ää தனியார் நிறுவனங்களும் உரிய வகையில் வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுத்து நாட்டின் வளர்ச்சியை உறுதிபடுத்துவதன் மூலம் கலாம் அவர்களின் கனவான இந்தியா 2020 என்ற இலக்கை அடைவதின் மூலம் இந்தியா சக்திவாய்ந்த நாடாக உருவெடுக்கும் என்று உரைத்தார்.
திருமதி. சந்தியா சிந்தாலா – Senior vice President NASSCOM, அவர்கள் கலந்து கொண்டு மென்பொருள் துறையில் புதிய கண்டு பிடிப்புகளின் இன்றியமையாமையும், மென்பொருள் துறை எதிர்கொண்டுள்ள சவால்களையும் விளக்கி கூறினார். பொறியியல் துறை மாணவர்கள் திறந்த மனதோடும்ää நேர்மறை சிந்தனையோடும் எதிர்காலத் தேவைகளை கருத்தில் கொண்டு புதிய தொழில் நுட்பங்களை உருவாக்கி வாழ்க்கை முறையை எளிதாக்கிட உதவிட வேண்டும். புதிய தொழில்நுட்பங்கள் சமுதாய வளர்ச்சிக்கும்ää வணிகத் துறையின் மேம்பாட்டிற்கு பயனுள்ளதாக உதவிட வேண்டும். இந்திய மென்பொருளாளர்கள் மிகச்சிறந்த தரத்தோடும், நேர்த்தியோடும் செயல்படுவதன் அடிப்படையில் சர்வதேச அங்கீகாரத்தை எளிதாக அடைவதன் மூலம் இந்தியாவில் வேலைவாய்ப்புகளை அதிகப்படுத்தி வளர்ச்சி பாதையில் எடுத்துச்செல்லும் என்று கூறினார்

இவ்விழாவில் முத்தாய்ப்பாக டிஜிட்டல் உருவத்தில் மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் Dr.A.P.J. அப்துல்கலாம் அவர்கள் மாணவர்கள் முன்னிலையில் தோன்றி மாணவ மாணவியரின் கேள்விகளுக்கு சிறந்த முறையில் இளைய தலைமுறையினரை ஊக்குவிக்கும் வகையில் பதிலளித்தார். இவ்விழாவில் 3000க்கும் மேற்பட்ட மாணவர்கள்ää ஆசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.  

No comments:

Post a Comment