A.R.Rahman has released Teaser of Nayanthara’s Aramm
A.R.Rahman has released Teaser of Nayanthara’s Aramm
Oscar Winning composer AR Rahman has released teaser of Nayanthara's Aramm. In this film, Nayanthara plays the role of a district collector who makes certain reformations in the village to bring about a positive change and if possible solve the problems that revolve around water scarcity. The teaser highlights the pain of the farmers and the many deaths caused by this problem.
Nayanthara has signed quite a few movies this year as the lead actor. Her recent release Dora also has her playing the main role, and for the first time in Tamil film history, this lead female actor got a cutout of herself raised at theatres.
Aramm is experimental, out-of-box script that is based on water scarcity and how it affects the villagers whose main source of income is agriculture. The film is directed by debutant Gopi Nainar and also stars Kaaka Muttai fame Vignesh and Ramesh. Vijay TV's Siricha pochu fame Palani Pattalam also acted in this movie.
ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட அறம் டீசர்
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் நேற்றைக்கு நயன்தாரா நடித்திருக்கும் அறம் படத்தின் டீசரை வெளியிட்டார். அறம் டீசர் வெளியாகி பெரு வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த படத்தில் மாவட்ட கலைக்டராக நடித்திருக்கிறார் நயன்தாரா. தண்ணீர் பஞ்சத்தால் விவசாயம் பாதித்த கிராமங்களில் மாற்று வழிகளின் மூலம் விவசாயிகளுக்கு புத்துயிர் வழங்கும் போராட்டத்தை கையாள்பவராக நடித்திருக்கிறார் நயன். விவசாயிகளின் வலிகளையும் வேதனைகளையும் வெளிப்படுத்தும் வசனங்களும் டீசரில் அமைந்துள்ளன.
இந்த ஆண்டு நயன்தாரா நடித்து வெளிவர உள்ள படங்கள் அனைத்துமே கதாநாயகியை மைய்யப்படுத்தி வரும் படங்களே. சமீபத்தில் வெளியான டோரா படத்திலும், நயன்தாராவே பிரதான கதாப்பாத்திரம். தமிழ் சினிமாவிலேயே முதன் முறையாக பட ரிலீஸிற்காக பிரம்மாண்ட கட் அவுட்கள் படத்தின் ஹீரோயினுக்கு வைக்கப்பட்டுள்ளன.
தண்ணீர் பஞ்சம், விவசாயிகளின் பிரச்சனை, அரசியல் போன்ற பலவற்றை பேசும் அறம் படம் முற்றிலும் புதிய பாணியில் எடுக்கப்படும் சோதனை முயற்சியான படம். அறிமுக இயக்குனர் கோபி நாயினார் இந்த படத்தை இயக்குகிறார். காக்க முட்டைப் படம் மூலம் புகழ் அடைந்த விக்னேஷ் மற்றும் ரமேஷ், சிரிச்சா போச்சு புகழ் பழனி பட்டாளம் போன்றோரும் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
No comments:
Post a Comment