Director A R Murugadoss Introducer new come Director
Director A R Murugadoss Introducer new come Director
முருகதாஸ் அறிமுகப்படுத்தும் இயக்குனர்!
தமிழ்த்திரையுலகில் தைரியமாக கருத்துக்களை சொல்லும் சிலரில் தயரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும் ஒருவர். இவர் முதல்முறையாக 'மிக மிக அவசரம்' படத்தின் மூலம் இயக்குநராகியிருக்கிறார். வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. பெண் போலீசார் களத்தில் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளை சொல்லும் படமாக உருவாகிவருகிறது. இப்படத்தின் டீசரை பார்த்த திரையுலக பிரபலங்கள் பலரும் இயக்குனர் சுரேஷ் காமாட்சியை பாராட்டி வருகின்றனர்.விரைவில் ரசிகர்களின் பார்வைக்கு வர இருக்கிறது.
இப்படத்தின் டீசர், ட்ரைலர் வெளியிடும் முன்னர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஏப்ரல் 19-ம் தேதி வெளியிடுப்படவுள்ளது. தயாரிப்பாளராக இருந்து இயக்குனர் வைத்தாராம் எடுக்கும் சுரேஷ் காமாட்சியை
பிரபல இயக்குநர் முருகதாஸ் அறிமுகப்படுத்துகிறார். ஸ்ரீப்ரியங்கா பெண்போலீஸாக நடித்துள்ளார். பாலபரணி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
No comments:
Post a Comment