Saturday 1 April 2017

Mukesh Ambani's new summer surprise for Jio users | ஜியோ - மீண்டும் சப்ரைஸ் கொடுத்த முகேஷ் அம்பானி

Mukesh Ambani's new summer surprise for Jio users | ஜியோ - மீண்டும் சப்ரைஸ் கொடுத்த முகேஷ் அம்பானி 

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நேற்றோடு தன்னுடைய இலவச சேவைகளை நிறுத்திக் கொள்ள இருந்தது. அனால், அந்த முடிவை மாற்றி மேலும் 15 நாட்கள் அவகாசம் தந்தும், அதுவரை இலவச சேவைகள் தொடரும் என்றும் மக்களை குஷிப் படுத்தி இருக்கிறார் முகேஷ் அம்பானி. ஜியோ அறிவித்த ஹாப்பி நியூ இயர் இலவச திட்டம் இன்றும் மார்ச் 31ஆம் தேதியோடு நிறைவடைகிறது. இதே திட்டத்தை மீண்டும் தொடர பயனர்கள் ஜியோ ப்ரைம் திட்டத்திற்கு மாறுவதன் மூலமாக பெறலாம். ஜியோ பிரைமிற்கு ஒரு முறை மட்டும் 99 ரூபாய் செலுத்த வேண்டும். 
பின்னர் தங்களுக்கு ஏற்ற பிளான்களை தேர்வு செய்து கொள்ள முடியும். ஹாப்பி நியூ இயர் திட்டம் பெற மாதம் 303 ருபாய் செலுத்துவதன் மூலம், இலவச அழைப்பு, தினம் 1 ஜிபி அளவிலான 4ஜி டேட்டா கிடைக்கும். ஏப்ரல் 15ஆம் தேதிக்குள்  ஜியோ ப்ரைம் திட்டதிற்குள் இணைந்து 303 ருபாய் அல்லது அதற்கு மேலான தொகைக்கு ரீ-சார்ஜ் செய்வதன் மூலம் சம்மர் சர்ப்ரைஸ் திட்டத்தில் பயனர்கள் சேர்த்துக் கொள்ளப் படுவர். இதனால், அடுத்த மூன்று மாதங்களுக்கு இலவசமாக ஜியோ சேவைகளை பெற முடியும். 
ஏர்டெல், வோடபோன், பிஎஸ்என்எல் போன்ற மற்ற நெட்ஒர்க்களும் டேட்டாவிலையைக் குறைத்து பல திட்டங்களை  அறிவித்துள்ளனர் ஆனாலும், தற்போது அறிவித்துள்ள சம்மர் சர்ப்ரைஸ் திட்டத்தினை சமாளிக்க வேண்டி இருக்கும். ரிலையன்ஸ் ஜியோ ஷோரூம்களிலும், மை ஜியோ ஆப் மூலமாக பயனர்கள் ஜியோ ப்ரைம் திட்டத்தில் இணைந்து கொள்ளலாம். இதுவரையில் 7.2 கோடிக்கும் அதிகமானோர் ஜியோ ப்ரைம் திட்டத்தில் இணைந்துள்ளனர். 
Mukesh Ambani's Reliance Jio has extended the deadline for subscriptions to its paid plans till April 15, and waived off monthly recharges for the next three months to all those who register in that time, intensifying a brutal price war being waged in the market.
So, those enrolling into Jio Prime by April 15 by paying Rs 99 along with their first purchase of the telco’s Rs 303 or other plans of higher amounts will get services till July end on a “complimentary basis,” under the “Summer Surprise” offer, the company said in a statement Friday.
These users will need to next recharge their plans only in August. Subscribers who have already registered for Jio Prime would be automatically shifted to the “Summer Surprise” offer. So far, over 72 million subscribers have opted for Prime membership, and Jio expects more of its over 100 million users and new ones to register for its services by mid-April.

No comments:

Post a Comment