Monday, 10 April 2017

Panic for Chennai Residents | சென்னை வாசிகள் பீதி!

Panic for Chennai Residents | சென்னை வாசிகள் பீதி!
Panic for Chennai Residents | சென்னை வாசிகள் பீதி!
சென்னை வாசிகள் பீதி!
சென்னையில் மெட்ரோ ரயிலுக்காக சுரங்கம் தோன்றும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்தப் பணியின் போது சென்னை நகரில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு வருவதும் பின்னர் சிமெண்ட் கலவைக்கொண்டு மூடுவதுமாக நடந்து வந்தது. இந்த சம்பவங்களில் பெரிய சேதம் எதுவும் நடக்கவில்லை. சில மாதங்களுக்கு முன்னர் அடையாறு மத்திய கைலாஷ் பகுதியில் ஒரு பெரிய பள்ளம் ஏற்பட்டு பின்னர் மூடப்பட்டது .
சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் இதய பகுதி என வர்ணிக்கப்படும் அண்ணாசாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டது. இதில் 25 ஜி வழித்தட மாநகர பேருந்தும், சொகுசு காரும் சிக்கியது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பலத்த க்யாங்க்ஜ்கள் ஏற்படவில்லை . சில மணி நேர போராட்டங்களுக்கு பிறகு பேருந்தும்,காரும் வெளியே எடுக்கப்பட்டு பள்ளத்தை சிமெண்ட் ரசாயன கலவை கொண்டு மூடினார். அதன் பிறகு இன்று காலையில் அதே இடத்திற்கு அருகில் போக்குவரத்து மிகுந்த காலைவேளையில் பெரிய விரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சிக்குள்ளாயினர். முதல் தகவலில் யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை . இதனை தொடர்ந்து அண்ணாசாலையில் போக்கு வரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மெட்ரோ நிறுவன அதிகாரிகள் உட்பட பல நிபுணர்கள் விரிசல் ஏற்படட இடத்தை ஆய்வு செய்து வருகின்றனர். இதனை தொடர்ந்து சென்னை வாகன ஓட்டிகளிடம்  ஒரு வித பீதி  ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment