Tuesday, 11 April 2017

Varalakshmi exitss Samuthirakani's movie claims male chauvinism

Varalakshmi exitss Samuthirakani's movie claims male chauvinism
Varalakshmi exitss Samuthirakani's movie claims male chauvinism
Actor-director Samuthirakani’s latest hit Appa is currently remade in Malayalam as Akasha Mittay which is directed by himself. Actor Jayaram plays the lead in the Malayalam version. It was Tamil actor Varalaxmi Sarathkumar, who was announced as the heroine. 
However, two days after the shooting, Varalaxmi opted out of the film, saying “can’t work with male chauvinists and manner less prods” in her twitter post. Now, director Samuthirakani has told that Varalaxmi decided to opt out as she wasn’t happy with the hotel accommodation provided to her. This became an argument and the actress decided not to do the film. Ineya has replaced Varalaxmi in Akasha Mittayi.
ஆணாதிக்கம் காரணமாக  சமுத்திரக்கனி படத்தில் இருந்து விலகிய வரலக்ஷ்மி
கடந்த ஆண்டு சமுத்திரக்கனியின் வெற்றிப்படமாக அமைந்தது 'அப்பா' திரைப்படம். விமர்சகர்களால் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் தற்போது மலையாளத்தில் ஆகாச மிட்டாய் என்ற பெயரில் தயாராகிவருகிறது. சமுத்திரக்கனியே மலையாள பாதிப்பையும் இயக்குகிறார். நடிகர் ஜெய்ராம் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை வரலக்ஷ்மி ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.

ஆகாச மிட்டாய் படத்தின் ஷூட்டிங் கேரளாவில் நடைபெற்று வருகிறது. இரண்டு நாட்களாக ஷூட்டிங்கில் கலந்து கொண்ட நடிகை வரலக்ஷ்மி, திடீரென இந்த படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது, "ஆணாதிக்கம் அதிகம் கொண்ட மனிதர்களோடு என்னால் பணியாற்ற இயலாது, எனவே ஆகாச மிட்டாய் படத்தில் இருந்து விலகுகிறேன். இது பற்றி இயக்குனர் சமுத்திரக்கனி விளக்கம் கேட்ட போது, " நடிகை வரலக்ஷ்மிக்கு அவர் விருப்பட்டது போல் ஹோட்டல் அறை ஒதுக்கப்படவில்லை. இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் இப்படத்தில் இருந்து விலகி உள்ளார். அவருக்கு பதில், நடிகை இனியா நடிப்பார்" என்று கூறியுள்ளார்.  

No comments:

Post a Comment