Thursday 6 April 2017

Vijay Sethupathi's Bollywood entry

Vijay Sethupathi's Bollywood entry
Vijay Sethupathi's Bollywood entry
Vijay Sethupathi will be seen playing an important role in Vasan Bala’s Hindi film Mard Ko Dard Nahi Hota, which is being produced by noted Bollywood director Anurag Kashyap.
Actors Abhimanyu Dasan and Radhika Madan will be seen playing the lead roles in the film and if sources are to be believed Vijay Sethupathi has been roped in to play a deadly baddie. Currently, Vijay Sethupathi is busy shooting for Karuppan, he also has 96 with Trisha, a film with director Gokul and Thiagarajan Kumararaja’s Aneedhi Kadhaigal in the pipeline.
பாலிவுட்டில் கால் பாதிக்கும் விஜய் சேதுபதி
தமிழ் சினிமாவில் சின்ன ரோல்களில் நடித்து வந்து, பெரும் போராட்டத்திற்கு பிறகு ஹீரோவானவர் நடிகர் விஜய் சேதுபதி. சில வருடங்களிலேயே பல வித மாறுபட்ட படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்துள்ளார். இவரது, புகழ் பாலிவுட்டிலும் பல இயக்குனர்களை கவனிக்க வைத்துள்ளது. இதன் மூலம் முதன் முறையாக பாலிவுட்டிலும் நடிக்க இருக்கிறார் விஜய் சேதுபதி.
இந்தியில் புகழ் பெற்ற இயக்குனர் அனுராக் காஷ்யப். அவரின், தயாரிப்பில் வாசன் பாலா இயக்கும் 'மர்து கோ தர்து நஹி ஹோதா' என பெயரிடப்பட்டுள்ள படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார் விஜய் சேதுபதி, ஆக்ரோஷமான கெட்டவராக இருக்குமாம் இவரது கதாப்பாத்திரம். இந்த படத்தில் அபிமன்யூ தாசன், ராதிகா மதன் ஆகியோர் நடிக்கின்றனர். 
தற்போது விஜய் சேதுபதி, மாதவனுடன் விக்ரம் வேதா என பெயரிடப்பட்டுள்ள புஷ்கர்-காயத்ரி ஜோடி இயக்கும் படத்திலும், கருப்பன், த்ரிஷாவுடன் ஜோடி சேரும் 96, தியாகராஜா குமாரசாமி இயக்கும் அநீதி கண்கள் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

No comments:

Post a Comment