Actor Surya's 100 crore happiness
Actor Surya's 100 crore happiness
100 கோடி சந்தோஷத்தில் சூர்யா
சமீபத்தில் வெளியான சூர்யாவின் சிங்கம் 3 படம், 100 சாதனை படைத்துள்ளது. இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளாராம் நடிகர் சூர்யா. இந்த படம் தொடங்கியதில் இருந்தே பல பிரச்சனைகளை சந்தித்தது. தொடர்ந்து ஷூட்டிங்கும் பல காரணங்களால் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது.
ஒருவழியாக ஷூட்டிங் முடிந்தாலும் ரிலீஸிலும் பிரச்னை வந்தது. கிட்டத் தட்ட நான்கு முறை ரிலீஸ் தேதி தள்ளிப் போனது. கடைசியில் கடந்த வாரம் படம் வெளிவந்த போது அரசியல் பிரச்சனையால் மக்களை அனைவரும் செய்தி சானல்கள் முன்னர் அமர்ந்திருந்தனர். மேலும் ஞானவேல் ராஜாவின் அடாவடிப் பேச்சால் தமிழராக்கர்ஸ் இணையதளமும் சிங்கம் 3 படத்தை நேரலையில் ஒளிபரப்பியது. அப்பப்பா, இத்தனை பிரச்சனைகளையும் கடந்து சிங்கம் 3, வசூலில் 100 கோடி என்ற மேஜிக் வசூலை பிடித்ததது குறிப்பிடத் தக்க சாதனை தான்.
இந்த வசூலால் மிக்க மகிழ்ச்சியில் உள்ளாராம் நடிகர் சூர்யா. நேற்று இயக்குனர் ஹரியைத் தன் அலுவலகத்திற்கு அழைத்த சூர்யா தன் அன்புத் பரிசாக பார்ச்சுனர் SUV கார் ஒன்றைப் பரிசளித்துள்ளார். இதனால் நெகிழ்ந்து போன ஹரி மீண்டும் சூர்யாவுடன் இணைந்து பணியாற்ற விருப்பத்தில் உள்ளாராம். யாரை எப்படி சந்தோஷப்படுத்த வேண்டும் என்பதை தெளிவாக தெரிந்து வைத்திருப்பர் போல நடிகர் சூர்யா.

Actor Surya's recent release Singam 3 has crossed over 100 crores even after so many hurdles. So Surya has invited director Hari to his office and presented him a Fortuner SUV car. This confirms that the super hit actor-director duo will work together again.
No comments:
Post a Comment