Wednesday, 15 February 2017

DMK ties to dismiss TN Government

DMK ties to dismiss TN Government
DMK ties to dismiss TN Government
ஆட்சி கலைப்பிற்கு முயற்சிக்கும் திமுக 
தமிழகத்தின் முன் எப்போதும் இல்லாத ஓர் நிலை அரசியல் அரங்கில் ஏற்பட்டுள்ளது. சசிகலா தலைமையிலான அதிமுகவிற்கு பன்னீர் செல்வம் தலைமையிலான ஓர் அணி தலைவலி கொடுத்து வருகிறது. சொத்துக் குவிப்பு வழக்கில் நேற்று ஜெயிலில் அடைக்கப்பட்டார் சசிகலா. அதன் பின்னர் நிலைமை சரியாகும் என பார்த்தால், அதற்கான அறிகுறியே சுத்தமாக இல்லை.
சசிகலா அணியைச் சேர்ந்த மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் நேற்று ஆளுநரை சந்தித்து தங்களின் கோரிக்கை மனு குறித்த நினைவூட்டலை தந்தார். முதல்வர் ஓபிஎஸ்சும் நேற்றைக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து அரைமணி நேரத்திற்கு மேலாக ஆலோசனையில் ஈடுபட்டார். ஆனாலும், இந்த நொடி வரை ஆளுநர் எந்த ஒரு முடிவையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். 

இந்த பிரச்சனையில் புதிய திருப்பமாக, திமுகவும் களம் இறங்கி உள்ளது. தங்களின் 89  எம்எல்ஏக்களையும் உடனடியாக சென்னை வருமாறு வாய்மொழி உத்தரவை பிறப்பித்தது உள்ளது திமுக தலைமை. ஏன் இந்த அழைப்பு என விசாரிக்கையில், திமுகவின் நடவடிக்கைகள் புரிந்தது. ஆளுநர் பெரும்பாலும் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடியை தங்கள் பலத்தை நிரூபிக்க சட்டபையைக் கூட்டப் போகிறாராம். அந்த வாக்கெடுப்பில் அதிமுக இரண்டாக பிளவு படுவது உறுதி. மேலும் திமுக எம்எல்ஏக்கள் யாரும் அதிமுகவின் இரண்டு அணிகளுக்கு தாவி வாக்கை மாற்றி போட்டுவிடக் கோட்ட்து என அஞ்சியே அவர்களை சென்னை வரவைத்துள்ளார்களாம். முதலில் ஓபிஎஸ்க்கு ஆதரவாக செயல்பட நினைத்தாராம் ஸ்டாலின் ஆனால், ஓபிஎஸ் பின்னால் பாஜக இருப்பதை அறிந்து வேறு மாதிரியான முடிவில் இருக்கிறார்களாம். 

அதிமுகவின் இரண்டு அணிகளும் பிரிந்து நிற்கையில் அடுத்த நிலையில் பலம் பொருந்திய கட்சியாக திமுக இருக்கும், ஆளுநர் திமுகவை கூட ஆட்சி அமைக்க அழைக்கலாம் என திமுக சீனியர்கள் நினைக்கிறார்களாம். ஒருவேளை, சசிகலா ஆதரவு எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபிக்கும் போது திமுகவின் 89 எம்எல்ஏக்களும் கூண்டோடு ராஜினாமா செய்து தமிழக அரசை கலைக்க ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்க உள்ளனர். எல்லா முடிவுகளும் இப்போது ஆளுநர் கையில் உள்ளது. 

DMK is the main rival party of ADMK which was observing all the developments of ADMK's split. The leader of opposition MK Stalin earlier decided to support OPS, however he changed his mind after knowing that BJP is behind OPS. All the 89 MLAs of DMK are ordered to report in Chennai on Thursday to avoid being approached by ADMK. If Governor calls Edappadi Palanichami to form the Government, DMK's 89 MLAs are ready to resign and pressure to dissolve the Government.

No comments:

Post a Comment