Governor breaks silence, Edappadi Palanichaami becomes CM
In a statement today, Governor Vidhyaasagar Rao has called ADMK's elected MLA's leader Edappadi Palanichami to form government. So, Edappadi is swearing in as Chief Minister this evening around 4 PM. After this move, OPS has addressed media and his supporters and told "Again our part and government has gone into the hands of a single family. Our fight will continue until we resume Amma's rule in TN".
மௌனம் கலைத்தார் ஆளுநர், முதல்வர் ஆகிறார் எடப்பாடி
கடந்த 10 நாட்களாக தமிழக அரசியலில் நிலவி வந்த குழப்பங்களுக்கு ஒருவழியாக முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறார் ஆளுநர் வித்யாசாகர் ராவ். சசிகலா ஆதரவு அதிமுக எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை கொடுத்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் எடப்பாடி பழனிச்சாமி. இன்று ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக பதவியேற்றுக் கொள்ளும்மாறு அழைப்பு விடுத்துள்ளார். 15 நாட்களுக்குள் சட்டசபையில் தன் பலத்தை நிரூபிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
இந்த அறிவிப்பு சசிகலா அணியினரை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. இன்று மாலையே முதல்வராக பதவி ஏற்க உள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.
சற்றுமுன், தொண்டர்களிடம் பேசிய பன்னீர் செல்வம் அவர்கள், "மீண்டும் ஒரு குடும்பத்தின் கைப்பிடிக்குள் நம் கட்சியும், ஆட்சியையும் சென்றுள்ளது. நமது அம்மா அவர்களின் ஆட்சியை மீண்டும் அமைக்கும் வரையில் நமது தர்ம யுத்தம் தொடரும்" என உறுதியாக புன்சிரிப்போடு கூறினார்.
No comments:
Post a Comment