Keerthi Suresh's new approach!
Keerthi Suresh's new approach!
நம்ப கீர்த்தி சுரேஷ் ரொம்ப உஷாரு!
இளம் நடிகையான கீர்த்தி சுரேஷ், 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் தமிழில் விக்ரம் பிரபு ஜோடியாக அறிமுகம் ஆனார். ஆனால் அந்த படம் சரியாக ஓடவில்லை எனினும் அதற்கு அடுத்து வந்த 'ரஜினி முருகன்' திரைப்படம் அவருக்கு மாபெரும் ஹிட்டாய் அமைந்தது. பின்னர் தமிழில் பார்த்து பார்த்து படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். கதையும், கதாநாயகனும், தன்னுடைய பாத்திரமும் நன்றாக இருந்தால் மட்டுமே படத்தை ஒத்துக்கொள்கிறார்.
விக்ரமுடன் நடிக்க வந்த வாய்ப்பை, வயது வித்தியாசத்தைக் காட்டி வேண்டாம் என்று சொன்ன போது ரசிகர்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானார். கீர்த்தியின் படங்களில் வரும் அவருடைய முக பாவங்களை வைத்தும், பேசும் தோரணைகளையும் வைத்தும் பல மீம்கள் சமூக வலைத்தளங்களில் பரவ ஆரம்பித்து அவரை வருத்தத்தில் ஆழ்த்தி உள்ளது.
சமீபத்தில் விஜயுடன் நடித்து வெளிவந்த 'பைரவா' ஹிட்டானாலும், கீர்த்தியை கிண்டல் செய்வதை மட்டும் ரசிகர்கள் விடவில்லை. இதற்கெல்லாம் முடிவு கட்டவேண்டுமென இப்போது புது யுக்தியை கையில் எடுத்திருக்கிறார் கீர்த்தி. இனிமேல் எந்த படமானாலும் எந்த சீன் ஆனாலும், ஷூட்டிங்கில் டேக் போகும் முன்னால் தன்னுடைய கேரவேனில் சிலமுறை அடுத்து நடிக்க வேண்டிய சீனை நடித்து பிராக்டிஸ் செய்து கொள்கிறாராம். அதைப் பார்த்து தேவையான மாற்றங்களைசொல்கிறாராம் அவரின் தாயும், முன்னாள் நடிகையுமான மேனகா. இப்படி கீர்த்தி உஷாரா இருந்து நடித்தாலும், நீண்ட நேரம் கேரவேனில் பிராக்டிஸ் செய்வதால் ஷூட்டிங் பாதிக்கப்படுவதாய் யூனிட்டில் முணுமுணுக்கிறார்கள்.
The Bairava actress Keerthi Suresh is the darling of meme creators. Following the trolls in social media, Keerthi Suresh has adopted a new approach to avoid them. In recent days she's rehearsing the scenes in caravan just before the shot; her mother and yesteryear's actress Menaka is giving corrections to Keerthi's expressions. Keerthi is optimistic that her new approach will help her overcome the trolls and will enhance her acting.
No comments:
Post a Comment