Saturday, 18 February 2017

MK Stalin's shirt torn, Marina became a battle ground again

MK Stalin's shirt torn, Marina became a battle ground again

MK Stalin's shirt torn, Marina became a battle ground again
Marina becomes another battle place for Tamil Nadu. Last month students, youngsters have demonstrated a great protest in Marina which ended successfully. Today Chief Minister Edappadi Palanisami has proven his strength in TN Assembly amids all uproars as chairs, mics are thrown, shirts of MLSs are torn, etc. After adjournment, MK Stalin has met Governor and demanded him to dismiss the current Government, later he went to Maria and is on hunger fast. Violences have broken across the states and people are in panic again. 
ஸ்டாலின் சட்டை கிழிப்பு, மீண்டும் போராட்டக் களமாகும் மெரினா 
இப்போதெல்லாம் மெரினா என்றாலே போராட்டம் என்றாகிவிட்டது. கடந்த மாதம் தான் உலகம் இதுவரை பாராத அறவழி போராட்டத்தை மெரினாவில் இளைஞர்களும் மாணவர்களும் நடத்திக் காட்டினார். தற்போது மீண்டும் போராட்டக் களமாக மாறிக் கொண்டிருக்கிறது நமது மெரினா.

இன்று சட்டசபையில் தன் பலத்தை நிரூபித்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. ஆனால், சட்டபையின் உள்ளே நடந்தது எல்லாம் கேலிக்கூத்து ரகம் தான். பிரச்னை என்னோவோ எடப்பாடி மற்றும் பன்னீருக்கு இடையே தான் என்றாலும் எதிர்க்கட்சியான திமுக தான் மிகுந்த ஆர்வம் காட்டி இன்றைய சட்டசபையில் முஷ்டி முறுக்கியது. சபாநாயகர் தனபாலை அவர் இருக்கையை விட்ட அகற்றினர், அவர் சட்டையை கிழித்துள்ளனர், மேஜை, நாற்காலிகள், மைக்குகள் எல்லாம் தூக்கி வீசப்பட்டன. எல்லாவற்றிற்கும் மேலாய் கிழிந்த சட்டையோடு வெளியே தூக்கி செல்லப்பட்டார் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின்.

ஜனநாயக மரபை அதிமுக மீறிவிட்டதாக ஆளும் அரசை உடனே நீக்க வேண்டும் எனவும் கிழிந்த சட்டையோடு சென்று ஆளுநரை சந்தித்தார் ஸ்டாலின். சந்திப்புக்குப் பின் நேராக மெரினா வந்தார் ஸ்டாலின். இப்போது காந்தி சிலை அருகே அமர்ந்து உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்துள்ளார். இதனால் திமுகவினருக்கு மெரினா விரைந்துள்ளனர். தமிழகம் எங்கும் ஆங்காங்கே பல வன்முறைகளும் வெடித்துள்ளன. 

இளைஞர்கள் நடத்திய ஜல்லிக்கட்டு போராட்டம் ஆறு நாட்களாய் அமைதியை நடந்து வெற்றி பெற்றது. இறுதியில் ஏழாம் நாளே வன்முறை வெடித்தது. இப்போது இங்கே முதல் நாள் வன்முறை வெடித்து போராட்டம் துவங்கியுள்ளது. மெரினாவில் அடுத்த சில நாட்கள் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இந்தநிலையில் பன்னீர் செல்வம் ஆதரவாளர்களும் மெரினாவில் கூடப் போவாதாய் தகவல் வந்துள்ளது. 

No comments:

Post a Comment