Monday, 13 February 2017

Sasikala explained 'What happened on the day Jayalalithaa died?'

Sasikala explained 'What happened on the day Jayalalithaa died?'



Sasikala explained "What happened on the day Jayalalithaa died?"
ஜெயலலிதா இறந்த அன்று என்ன நடந்தது? முதன் முறையாக விவரித்த சசிகலா 
தொண்டர்களை இன்று சந்தித்த சசிகலா, மறைந்த முதல்வர் ஜெயலலிதா இறந்த அன்று என்ன நடந்தது என முதன் முறையாக விவரித்தார். "டிசம்பர் 4ம் தேதி திடீரென்று அக்காவுக்கு(ஜெயலலிதா) நெஞ்சுவலி வந்தது. நான் பதறிப்போய் மருத்துவர்களை உடனே அழைத்தேன். அப்போதிலிருந்து அவருடைய நிலைமை மிக மோசமடைந்தது. அன்றே அனைத்து அதிமுக எம்எல்ஏக்களையும் அப்போல்லோவிற்கு வரச் சொன்னேன். டிசம்பர் 5 மதியம் 12 அளவில், நம் அம்மாவின் நிலைமை கையை மீறிப்போய்விட்டது, பிழைப்பது கடினம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். நான் கதறி அழுதேன். 

உடனே பன்னீர் செல்வம் உள்ளிட்ட 5 அமைச்சர்களை அழைத்து, அக்காவிற்கு இப்படி ஆகிப்போச்சு, இன்றிரவே ஓபிஎஸ் முதல்வராக பதவியேற்கட்டும் என்றேன். உடடனே, பன்னீர் செல்வம், இல்லை இல்லை நீங்கள் தன் முதல்வராக வேண்டும், அதை தான் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்றார். அதெல்லாம் வேண்டாம் நான் அக்காவின் அருகிலேயே இருக்க வேண்டும், எனக்கு பதவி எல்லாம் வேண்டாம். தேவைப்பட்டால் அதை எல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றேன். பின்னர் அவர்கள் பதவி ஏற்றார்கள். 

எனக்கு முதல்வராகும் ஆசை இருந்திருந்தால், அன்றே முதல்வர் ஆகி இருப்பேன். சட்டமன்றத்தில், திமுகவினரோடு பன்னீர் செல்வம் ஒட்டி உறவாடியதும், துரைமுருகன் அவர்களின் பேச்சை பன்னீர் செல்வம் கண்டிக்காததுமே எனக்கு அவர் மீதான சந்தேகத்தை உண்டாக்கியது." இவ்வாறாக கூறியுள்ளார். 

Today, among ADMK cadres Sasikala has explained what really happened on the day former Chief Minister Jayalalithaa died. Around 12 noon, on Dec 5 doctors have told Sasikala that Jayalalithaa's condition is out of hope. Immediately she called 5 ministers including OPS and asked Pannerselvam to take charge as Chief minister. Refused OPS instead asked Sasikala to be the next CM. But Sasikala insisted him to become CM. Sasikala also said that she would have become CM on that day, if she had wanted. The way OPS behaved in TN Assembly and DMK's Duraimurugan's speech have made her to rethink of her decision not to become CM.
What’s Popular Now

No comments:

Post a Comment