Monday, 6 February 2017

Secret behind Ajith's six pack

Secret behind Ajith's six pack

Secret behind Ajith's six pack
அஜித்தின் சிக்ஸ் பேக் ரகசியம் 
அஜித்தின் விவேகம் படத்தின் முதல் பார்வை (First look) சமீபத்தில் வெளிவந்து தல ரசிகர்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பு ரசிகர்களின் வரவேற்பையும் பெற்றது. அதற்கு முக்கிய காரணம் அஜித்தின் சிக்ஸ் பேக் தான். எப்போதும் சற்று பூசினார் போன்ற உடம்புடன் அசத்தலாக இருந்த அஜித், இந்த விவேகம் படத்திற்காக மெனக்கெட்டு தன்னை வருத்தி சிக்ஸ் பேக் வைத்து அத்தனைபேரையும் ஆச்சர்ய வியப்பில் ஆழ்த்திவிட்டார். டோலிவுட் ராணா முதல் பாலிவுட் ஷாரூக்கான் வரை பலரும் தங்களின் வியப்பை சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்தனர். எப்படி சாத்தியமானது இந்த சிக்ஸ் பேக்? அஜித்துக்கு நெருக்கமான வட்டாரத்தை நாம் அணுகியபோது கிடைத்த விவரங்கள் இதோ..
இந்த படத்தின் கதைக்கும் தன் கதாப்பாத்திரத்திற்கும் நன்றாக இருக்குமே என்று  அஜித்தே விரும்பி தான் சிக்ஸ் பேக் வைத்து சிக்கென்று ஆகியுள்ளார். அதற்காக அவர் பின்பற்றியது அரிசி, கோதுமை போன்றவை அல்லாத கீட்டோஜெனிக் டயட்டைத்தானாம். முன்னர் அவருக்கு எடைக்கு குறைப்பிற்கு பேலியோ டயட் தான் பரிந்துரைக்கப்பட்டது. பிறகு, எடைக்கு குறைப்பு + தசை பற்றிற்காக கீட்டோஜெனிக் தேர்வு செய்யப்பட்டு அதையே கடைப்ப்பிடித்துள்ளார். டயட் உணவுகளுடன் தினசரி அரை மணி நேரம் கார்டியோ பின்னர் இதர உடற்பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார். இந்த டயட்டின் போது தனக்கு விருப்பமான பிரியாணி முதலான அனைத்து உணவுகளையும் தவிர்த்துள்ளார் தல. சப்ளிமென்ட், ஸ்டிராய்டுகள் எதையும் எடுத்துக்கொள்ளவில்லையாம்.  இப்படி கட்டுக்கோப்பாக டயட் மற்றும் உடற்பயிற்சியால் சிக்கென சிக்ஸ் பேக் சிங்கமாகி உள்ளார் தல அஜித். 

Ajith's first look in his upcoming film Vivegam has set fire in social media as many stars including Sharukh Khan have praised Ajith for his six pack look. We learn that Ajith has followed Ketogenic diet to achieve the macho look by reducing weight. His transformation also involved 30 minutes of cardio and regular gym exercises. Throughout his makeover Thala Ajith has stayed away from his favourite foods like Biriyani and he has avoided taking supplements which is remarkable. 

No comments:

Post a Comment