Thursday, 9 February 2017

Who is behind of 'fierce' OPS?!

Who is behind of 'fierce' OPS?!
Who is behind of 'fierce' OPS?!
அதிரடி பன்னீர், பின்னணியில் யார் ?!
முதல்வராக முற்சித்துக் கொண்டிருக்கும் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவிற்கு எதிராக போர்க்கொடி தொக்கியிருக்கும் முதல்வர் பன்னீர் செல்வத்தின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது தெரிந்து சசிகலா தரப்பு அதிர்ச்சியில் உள்ளது. 
ஏனெனில், பன்னீர் செல்வத்திற்கு ஒன்றிற்கும் மேற்பட்ட பல அரசியல் பெருந் தலைகள்ஆதரவாய் உள்ளனர். 
சசிகலா தன் பேட்டியில் சொன்னது போன்றே, ஓபிஎஸ்க்கு திமுகவின் மறைமுக ஆதரவு உள்ளது. இதன் மூலம், சசி தரப்பை அரசியலை விட்டே ஒதுக்கவும், பின்னர் சாதுவாக அறியப்பட்ட ஓபிஎஸ்-யை மட்டம் தட்டி தங்களுடைய ஆதிக்கத்தைக் கொண்டு வரவும் திமுக ஆர்வம் காட்டி வருகிறது. வேண்டுமென்றே சிண்டு முடியவே சட்டமன்றத்தில் துரைமுருகன் ஓபிஎஸ் தொடர்ந்து நான்கு ஆண்டுகளுக்கு முதல்வராக இருக்கவேண்டும் என கூறினார். இங்கிருந்தே சசிகளவிற்கும் ஒபிஸ்க்கும் உரசல் உறுதியாகியது. ஒருவேளை ஓபிஎஸ் மீது நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வரப்பட்டாலும் அவருக்கு ஆதரவாக வாக்களிக்க தயாராக இருக்கிறதாம் திமுக. 
பாஜகவும் தங்களுக்கு ஆதரவாக செயல்பட ஓபிஎஸ் போன்ற ஒரு ஆளே அதிமுகவை வழி நடத்த வேண்டும் என நினைக்கிறதாம். காங்கிரசோடு நெருங்கி செயல்படும் சசி தரப்பை ஒதுக்கியே வைக்கிறது பாஜக. சசிகலா மீது இயல்பாகவே ஒரு எதிர்மறை எண்ணம் மக்களிடத்தில் உள்ளதை உணர்ந்தே அவரோடு சேர ஒரு சில பாஜக தலைவர்கள் விருப்பம் காட்டவில்லையாம். அதனாலேயே, துணிந்து செயல்படுங்கள், எந்த பிரச்னை வந்தாலும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என ஓபிஎஸ்க்கு நம்பிக்கை கொடுத்து களம் இறக்கி உள்ளது பாஜக. 

திமுக, பாஜக ஆதரவை தவிர்த்து சசி & கோ வால் பின்னுக்குத் தள்ளப்பட்ட முன்னாள் அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்களும் பன்னீர்செல்வத்தின் பின்னால் அணிவகுத்திருக்கின்றனர். மேலும் கமல், கௌதமி, சித்தார்த் உள்ளிட்ட பல திரைப் பிரபலங்களும் பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாய் குரல் கொடுக்கத் தொடங்கி உள்ளனர். உளவுத் துறை மூலம் வந்த அறிக்கையின் படி,மக்களின் எண்ணமும் தனக்கு ஆதரவாய் இருப்பதை பார்த்து நம்பிக்கையில் உள்ளாராம் ஓபிஎஸ். மக்கள் விரும்புபவர்கள் முதல்வராக வர வேண்டும் என அவர் கூறியதன் காரணமும் இது தானாம்.  

Chief Minister Panner Selvam has stumbled the nation with his Interview after meditating in his leader and Former Chief Minister Jayalalithaa's memorial. Sasikala is utter shock after she learns that DMK and BJP are behind OPS. This is making it difficult for Sasikala to pursue her dream to become the Chief Minister of Tamil Nadu. Some of the film stars including Kamal, Gautami and Siddarth have expressed their support to OPS.

No comments:

Post a Comment