Monday, 20 March 2017

Arya is Born in Vishnu Vishal House | விஷ்ணு விஷால் வீட்டில் பிறந்த ஆர்யா

Arya is Born in Vishnu Vishal House | விஷ்ணு விஷால் வீட்டில் பிறந்த ஆர்யா
Actor Vishnu Vishal has named his son 'Aryan' after his close friend and co actor Arya. Vishnu has took it to twitter to announce his son's name and released pictures of his new born son. The new gen actors like Arya, Vishnu, Jayam Ravi, Vishal, Jeeva, Vikranth are in good relationship after CCL. 
Arya has been doing cameos in his friend's movies to support their movies. The friendship that these gen-x actor have is something inspiring as they stood for others in critical situations. These actors were in ground and supported when actor Vishal contested in South Indian actor's association. Vishnu naming his son after actor Arya is  proving their friendship.
Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q

Follow us:

தன் மகனுக்கு ஆர்யாவின் பெயரை வைத்த நடிகர் விஷ்ணு விஷால்

நடிகர் விஷ்ணு விஷால் புதிகாக பிறந்துள்ள தன்னுடைய மகனுக்கு தன்னுடைய நெருங்கிய நண்பரும், நடிகருமான ஆர்யாவின் பெயரை வைத்துள்ளார். நடிகர் ஆர்யா தன்னுடைய சகநடிகர்களுடன் நட்போடு நெருங்கிப் பழகி வருபவர். தன் நண்பர்களின் படங்களிலும் அவ்வப்போது கெஸ்ட் ரோலில் வந்து உதவி புரிவார். ஆர்யாவைப் போலவே நடிகர்கள் விஷால், விக்ராந்த், ஜீவா, விஷ்ணு, ஜெயம் ரவி உள்ளிட்டோர் நெருங்கிய நண்பர்களாக இருக்கின்றனர்.

சில வருடங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்ட சிசிஎல் எனப்படும் செலபிரிட்டி கிரிக்கெட் லீக் போட்டியின் மூலமே இந்த இளம் நடிகர்கள் எல்லாம் நெருக்கமான வட்டாமாகினர். அப்போதிலிருந்து ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்து வருகின்றனர். நடிகர் சங்கத் தேர்தலிலும் நடிகர் விஷாலுக்கு ஆதரவாக செயல்பட்டு அவரை ஜெயிக்க வைத்தனர். இந்த நண்பர்களில் ஒருவருக்கு பிரச்னை என்றாலும் அனைவரும் களத்தில் குதித்து பிரச்சனையை தீர்க்கும் அளவுக்கு உறுதியானது இவர்களின் நட்பு.

தற்போது இவர்களின் நட்பின் ஆழத்தை காட்டும் வகையில் ஒரு விஷயத்தை செய்துள்ளார் நடிகர் விஷ்ணு விஷால். புதிதாகப் பிறந்த தன்னுடைய ஆண் குழந்தைக்கு 'ஆர்யன்' என்று தன் நண்பரின் பெயரை வைத்துள்ளார். இதை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விஷ்ணுவே பகிர்ந்துள்ளார்.  


No comments:

Post a Comment