Sunday, 19 March 2017

Ilaiyaraja's Shocking notice to SPB

Ilaiyaraja's Shocking notice to SPB
Ilaiyaraja's Shocking notice to SPB
SP Balasubramanian wrote on his official Facebook page that iconic music composer Ilaiyaraaja has sent him a legal notice against singing songs composed by the latter. “Couple of days back, an Attorney representing Shri.Iliaya Raja, sent legal notices to me, Smt.Chithra, Charan, organisers of the concerts in different cities and the managements of all the venues, which says that we are not supposed to perform compositions of Shri.Iliayaraja without his permission, if so, it is breaking the copyright law and have to pay huge financial penalities and face legal action. Let me say, I am ignorant of these legalities,” he wrote.
SPB is currently in the US as part of his SPB50 tour and hence wrote, “I did not get any feelers from Shri. Raja’s office at that time. I dont know why now when we started our US tour. As I said earlier, I am ignorant of the law. If it is a law, so be it and I obey it.”
He also said that due to the legal notice he won’t be able to perform the evergreen songs that he sang under Ilaiyaraaja’s composition in his upcoming concerts. “In these circumstances, our troupe can not perform Isaijnani’s compositions from today. But the show should happen. By God’s grace I have sung lots of other composer’s songs too which we will present. Hope you all will bless our concerts as usual. I am always grateful for your love and affection,(sic)” he said.
எஸ்.பி.பிக்கு இளையராஜா கொடுத்த அதிர்ச்சி 
தமிழ் சினிமாவின் எவர்கிரீன் ஜோடியாக திகழ்ந்து வருபவர்கள் இசை அமைப்பாளர் இளையராஜா மற்றும் பின்னணிப் பாடாகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். இருவரும் 70 களில் இருந்தே தங்களின் ஆதிக்கத்தை இசைத்துறையில் செலுத்திவருகின்றனர். இளையராஜா இசை அமைத்த 80 சதவீதத்துக்கு மேலான பாடல்களை பாடிய ஆண் பாடகர் எஸ்.பி.பி தான். ஒவ்வொரு நிகழ்விலும் இருவரும் ஒருவரை மாற்றி ஒருவர் புகழ்ந்து கொள்வர். அண்ணன் தம்பியாக பழகி வந்த இவர்களின் நட்பிற்குள் காப்பிரைட் என்னும் விஷயத்தால் விரிசல் ஏற்பட்டுள்ளது. 

கடந்த சில ஆண்டுகளாகவே, தன்னுடைய பாடல்களை தன் அனுமதி இல்லாமல் யாரும் பயன் படுத்தக் கூடாது என காப்புரிமை உரிமைச் சட்டத்தின் கீழ் வலியுறுத்தி வருகிறார் இளையராஜா. அப்படி எங்கேனும், பயன்படுத்தும் பட்சத்தில் அதற்கான ராயல்டியைத் தரவேண்டும் என்கிறது  இளையராஜா தரப்பு. ஆனால், அந்த ராயல்டி தொகை என்பது மிக மிக அதிகம் என பதறுகின்றனர் விழா அமைப்பினர். இந்த காரணத்தினாலேயே,  இளையராஜாவின் பாடல்களை ஒலிபரப்புவதை நிறுத்திவிட்டன பல எஃப்.எம் நிறுவனங்கள்.

எஸ்.பி.பி திரை உலகத்தில் பாட வந்து 50 ஆண்டுகள் ஆனதை ஒட்டி எஸ்.பி.பி-50 என இசை நிகழ்ச்சிகளை உலகமெங்கும் ஏற்பாடு செய்திருந்தார் எஸ்.பி.பியின் மகனும் பாடகருமான எஸ்.பி.பி.சரண்.  இந்நிலையில் எஸ்.பி.பி-50 இசை நிகழ்ச்சியில் தன் அனுமதி இல்லாமல் தன்னுடைய பாடல்களை பாடக் கூடாது என நோட்டீஸ் அனுப்பி உள்ளார் இளையராஜா. இது தொடர்பாக எஸ்.பி.பி தன்னுடைய அதிகாரப் பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு, இளையராஜாவின் சார்பில் அவரது வழக்கறிஞர், எனக்கும், சரணுக்கும், பாடகி சித்ராவிற்கும், உலகளவில் கச்சேரியை நடத்தும் ஒருங்கிணைப்பாளர்களுக்கும் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த நோட்டீஸில் 'இளையராஜா கம்போஸ் செய்த பாடல்களை அவரின் அனுமதி இல்லாமல் மேடையில் பாடவோ, இசைக்கச்சேரி நடத்தவோ கூடாது. அதையும் மீறி செய்தால் காப்புரிமை சட்டத்திற்கு எதிராகிவிடும். எனவே மிகப்பெரிய அபராதத்தொகையை சட்டப்படி தரவேண்டியிருக்கும்' என்று குறிப்பிட்டிருந்தது. ஆனால் இந்த மாதிரியான சட்ட திட்டங்கள் பற்றிய புரிதல் எனக்கு இல்லை. எனக்கு இந்த சட்டம் குறித்த அறிவு கிடையாது. ஆனாலும் இதுதான் சட்டம் என்றால் எற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன். இந்த சூழ்நிலையில் நானும், எங்கள் அணியினரும், இன்றிலிருந்து இளையராஜாவின் பாடல்களை மேடையில் பாட மாட்டோம்.இளையராஜா தவிர, பல இசையமைப்பாளர்களின் இசையில் நான் பாடல்கள் பாடியிருக்கிறேன். அந்த பாடல்களை இனிவரும் கச்சேரிகளில் பாடுவேன். இந்த விஷயத்தை மேலும் பெரிதாக்க வேண்டாம் என்று பதிவிட்டிருக்கிறார் எஸ்.பி.பி.

தங்களின் நோட்டீஸ் நியாயமானது தான் என விளக்கி உள்ளது இளையராஜாவின் வழக்கறிஞர் தரப்பு. இளையராஜாவின் தம்பியும் இயக்குனருமான கங்கை அமரன்,  "இளையராஜாவின் இசை என்பது அனைவருக்கும் பொதுவானது. சிறு பணத்திற்காக அதை ஒருவரது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது ஏற்றுக் கொள்ள முடியாது" என கூறியுள்ளார். கிட்டத்தட்ட 50 ஆண்டு கால நட்பு காப்பிரைட் என்பதில் பிரிகிறது என்பது, இசை ரசிகர்களை அதிர்ச்சியில் உள்ளாக்கி உள்ளது. 

No comments:

Post a Comment