Sunday, 19 March 2017

Kamal Haasan’s brother Chandrahasan passes away

Kamal Haasan’s brother Chandrahasan passes away

கமல்ஹாசனின் இரண்டாவது மூத்த சகோதரரும் ‘ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்’ நிறுவனத்தின் நிர்வாகியாகவும்,  கமல்ஹாசனுக்கு நண்பனாகவும், தந்தையாகவும், உற்ற துணையாகவும் இருந்து வந்த சந்திரஹாசன் நேற்றிரவு ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 82.  சந்திரஹாசனின் மனைவி கீதாமணி இறந்தபின் , சந்திரஹாசன் தனது மகள் அனுஹாசனுடன் லண்டனில் வசித்து வந்தார்.
கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான  ‘களத்தூர் கண்ணம்மா’ முதல் 'சபாஷ் நாயுடு' வரை அவருக்கு பக்கபலமாக இருந்து வந்த சந்திரஹாசனின் பிரிவு கமல்ஹாசனை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கமல்ஹாசன் கூறியிருப்பதாவது..
'நண்பனாய் நல்லாசானாய், தமயனும் தகப்பனுமாய் அவரை பெற்றதால் உற்றது நல் வாழ்வு. எனக்காக அவர் கண்ட கனவுகளில் பாதியைக் கூட நான் நிரைவேற்றவில்லை'

No comments:

Post a Comment