Saturday, 4 March 2017

Modi's nervous wait for UP elections mandate

Modi's nervous wait for UP elections mandate
Modi's nervous wait for UP elections mandate
மோடிக்கு காத்திருக்கும் அதிர்ச்சி, தயாராகும் உத்திரப் பிரதேசம் 
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக மோடி தலைமையில் களம் கண்டது. மோடி ஆண்டு வந்த குஜராத்தின் வளர்ச்சி என அழகாக திட்டமிட்டு தங்களின் விளம்பரத்தை நாடெங்கிலும் பரப்பி வந்தனர். தமிழ்நாடு, கேரளா போன்ற படிப்பறிவு அதிகம் கொண்ட மாநில மக்களிடம் இந்த விளம்பரங்கள் எடுபடவில்லை. பொருளாதாரத்தில் பின் தங்கிய, படிப்பறிவு குறைந்த உத்திரப் பிரதேசத்தில் பிரச்சாரம் மேற்கோட்ந்த மோடி, கறுப்புப் பணத்தை மீது அனைத்து இந்தியர்களின் வங்கி கணக்கிலும் குறைந்தது 15 லட்சம் ருபாய் வரவு வைக்கப்படும் என வாக்குறுதி அளித்தார். மோடியின் விளம்பர டீமும் அதையே முக்கியமாக வைத்து தங்களின் விளம்பரங்களை அதிகப்படுத்தினர். மோடியின் மாய வார்த்தைகளை நம்பிய உபி மக்கள் மொத்தமுள்ள 80 நாடாளுமன்ற தொகுதிகளில் 72 தொகுதிகளை பாஜகவிற்கு அளித்தனர். 
மொத்தமாக ஆட்சியமைக்கத் தேவையான 272 இடங்கள் என்ற எண்ணிக்கையை மட்டுமே கூட்டணி கட்சிகளோடு குறி வைத்த மோடி டீம், 280க்கும் மேற்பட்ட இடங்கள் பாஜகவிற்கு மட்டுமே கிடைத்து, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைத்தது பாஜக. இதற்கு முக்கிய காரணம் உபி மக்கள் தான். உபியைச் சேர்ந்த முலாயம் சிங், மாயாவதி உள்ளிட்டோரின் பிரதமர் கனவும் அதனால் தகர்ந்தது. எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்க பெருமபான்மை கிடைக்கவில்லை என்றால் தங்கள் ஆதரவில் மத்திய அரசு அமையும் போது தமிழ் நாட்டிற்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் பெற முடியும் என்று நினைத்திருந்த மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் எண்ணமும் ஈடேறவில்லை. அதிமுக சார்பில் 37 எம்பிக்கள் இருந்தாலும், ஆட்சியமைக்க தங்களுக்கு அதிமுகவின் தயவு தேவை இல்லாததாலேயே சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பால் ஜெயலலிதா சிறை செல்ல வேண்டி இருந்தது என்பது வேறு கதை. 

இப்படியாக இந்திய அரசியலில் பல்வேறு முக்கிய நிகழ்வுகளுக்கு காரணமாக இருந்தது உபி மக்கள் 2014ல் மோடிக்கு கொடுத்த வெற்றியே. ஆனால், அவர்களுக்கு மோடி குடுத்த வாக்குறுதியை காப்பாற்றினாரா என்றால் அது மிகப்பெரும் கேள்விக்குறியே. கருப்பு பணத்தை மீட்கும் நடவடிக்கையாக டீமானிடைசேஷன் திட்டத்தை கொண்டு வந்தார் மோடி. ஆனால், அது மக்கிடையே வரவேற்பை பெற்றுத் தருவதற்கு பதிலாக மக்களை நாட்கணக்கில் வங்கிகளின் முன்பாக நிற்கவைத்து வாட்டி வதைத்தது. இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டது ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் தான். கருப்பு பணத்தை மீட்டு புது இந்தியா படைத்துவிட்டோம் எனக் கூறினார் மோடி, ஆனாலும், இதுவரை எந்த ஒரு இந்தியன் கணக்கிலும் மோடி சொன்னது போல 15 லட்சம் அல்ல, ஓர் ருபாய் கூட வரவு வைக்கவில்லை. 

இந்த நிலையில் தான், உத்திர பிரதேசத்தின் சட்டமன்றத் தேர்தல் பல கட்டங்களாக நடை பெற்று வருகிறது. 2014-ல் மோடிக்கு அளித்த ஆதரித்த ஆதரவே தங்களுக்கு பல இம்சைகளை தந்ததை மக்கள் இன்னும் மறந்ததாய் தெரியவில்லை. ஆட்சி அமைக்கும் அளவுக்கு எம்எல்ஏக்கள் எண்ணிக்கை தங்களுக்கு வரவில்லை என்றாலும், வரவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில் உதவும் வகையில் எம்எல்ஏக்கள் கிடைத்தால் போதும் என்றே பாஜக தலைமை தேர்தலில் பங்கேற்றுள்ளது. உத்திர பிரதேசத்தின் சட்டமன்றத் தேர்தலின் வெற்றி தோல்வியே பாஜகவின் எதிர்காலத்தையும், மோடியின் ஆட்சி தொடர்வதையும் தீர்மானிக்கும் என்பது உண்மை. 

Prime Minister Modi and his BJP party-men are nervous as Uttar Pradesh's legislative elections are in progress. In 2014, UP has gifted 72 MPs to Modi out of the total seats of 80, which was a massive support to form the union government. During the 2014 campaigns, Modi has promised to deposit 15 lakhs rupees in every India account as he would bring back the black money. His bold move 'demonetisation' was to bring out the black money, but it lead to discomfort of common people. It's a ground test for Modi as it will impact the forthcoming Presidential election. We have to wait until the mandate is pronounced, if Modi could get minimum marks. 

No comments:

Post a Comment