Friday, 3 March 2017

Rapidly Ready For The British Queen Baahubali 2

Rapidly Ready For The British Queen Baahubali 2


இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படம் தமிழ்நாடு, ஆந்திராவைத் தாண்டி இந்தியா முழுவதும் ஹிட் ஆகியது. மேலும் பல நாடுகளிலும் இந்திய மொழிகளிலேயே வெளியாகியது. முதன்முறையாக ஆகிறாள், பிரெஞ், ஜெர்மன் மற்றும் சீன மொழிகளில் வெளியாகி உலகெங்கிலும் வெற்றி பெற்றது. ஓர் இந்தியப்படமாக உலகமெங்கும் வியந்து பார்த்த திரைப்படமாக விளங்கியது பாகுபலி.

பாகுபலி படத்தின் க்ளைமேக்சில் 'கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார்?' என்ற கேள்வியும் உலக அளவில் கூகுளில் அதிக அளவில் தேடப்பட்டதாய் இருந்தது. இந்த ஒரு கேள்வியே பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்திற்கு எதிர்பார்ப்பைக் கூட்டி உள்ளது. இந்தியர்களை போலவே பலவெளிநாட்டினரும் பாகுபலி 2 படத்திற்காக காத்திருக்கின்றனர். இந்நிலையில் பாகுபலி 2 ஆனது இந்தியாவில் ரிலீஸ் ஆகும் முன்னரே இங்கிலாந்தில் வெளியாக உள்ளது. இந்திய - இங்கிலாந்து பாரம்பர்ய விழாவில் பாகுபலி 2 திரைப்படம் திரையிடப் பட உள்ளது, இதன் மூலம் பாகுபலி 2 திரைப்படத்தை எலிசபெத் ராணி நமக்கு முன்னரே பார்க்க இருக்கிறார். அவரோடு இணைந்து பிரதமர் மோடியும் இத்திரைப்படத்தைக் காண உள்ளார். இதற்காக பாகுபலி குழுவினர் படு வேகமாக படத்தின் இறுதிக்கு கட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

Baahubali 2 is on its final phase of making. The movie will be screened at India - Britiain cultural fest. Queen Elizabeth will be attending the ceremony and watch Baahubali 2 along with Indian Prime minister Modi.

No comments:

Post a Comment