Following the critically acclaimed ‘PAAMBHU SATTAI’, Music director Ajeesh has now composed for ‘THIRI’
Following the critically acclaimed ‘PAAMBHU SATTAI’, Music director Ajeesh has now composed for ‘THIRI’
Remember the super hit song ‘Idhu Varai’ from the film GOA? The man behind that mesmerizing vocal – Ajeesh has now turned as music composer through the sleeper hit film ‘PAAMBHU SATTAI’. The songs and BGMs that are composed by Ajeesh for ‘Paambhu Sattai’ had been praised by the audience as well as by the Media critics. Now, the young and talented composer Ajeesh is all set to skip the hearts of music lovers by his next flick ‘THIRI’, which has Ashwin Kakkamanu and Swathi Reddy in the lead. The Audio and Trailer of THIRI will be launched on 17th April, 2017.
“Yuvan sir was the first person who introduced me to the film industry as a singer by giving me one of his best tunes, and I’ll be thankful to him forever. I feel blessed to have worked for Paambhusattai, because the script itself had so much scope for music. Since I love live instruments like Violins and Violas, the audience could have felt the soul of strings in Paambhu Sattai. I must thank my producer Mano Bala sir and my director Adam Dasan for giving me this wonderful opportunity. The reviews of Paambhu sattai served as a major moral booster to all of us who were involved in this film .
"Thiri" my next film is gearing up for release. The album has totally seven tracks and I am happy with how I have done and I really hope the listeners like it too” says Ajeesh, the composer of ‘Paambhu Sattai’ and ‘Thiri’ in a harmonic tone.
'பாம்பு சட்டை' படத்தை தொடர்ந்து 'திரி' படத்திற்கு இசையமைத்து இருக்கிறார் இசையமைப்பாளர் அஜீஷ்
'கோவா' படத்தின் 'இதுவரை இல்லாத' என்ற பாடல் மூலம் இசை பிரியர்களின் உள்ளங்களை கவர்ந்து சென்ற பாடகர் அஜீஷ், சமீபத்தில் வெளியாகி, ரசிகர்களின் பாராட்டுகளை வெகுவாக பெற்ற பாம்பு சட்டை திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி இருக்கிறார். இவரின் இசையில் அடுத்ததாக வெளியாக இருக்கின்ற திரைப்படம், அஸ்வின் காக்கமனு - சுவாதி ரெட்டி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் 'திரி'. திரி படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா வருகின்ற ஏப்ரல் 17 ஆம் தேதி அன்று நடைபெறுகிறது.
"என்னை முதல் முதலாக ஒரு பாடகராக திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய யுவன் சாருக்கு நான் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன். பாம்பு சட்டை போன்ற இசைக்கு முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படத்தில் நான் பணியாற்றியது, எனக்கு கிடைத்த பாக்கியம் என்று தான் நான் சொல்லுவேன். எனக்கு எப்போதுமே வயோலின், வயோலா போன்ற இசை கருவிகள் மீது காதல் அதிகம். அந்த சாயலை ரசிகர்கள் பாம்பு சட்டை படத்தின் பிண்ணனி இசையில் உணர்ந்து இருப்பார்கள். இத்தகைய அற்புதமான வாய்ப்பை எனக்கு அளித்த என்னுடைய தயாரிப்பாளர் மனோ பாலா சாருக்கும், இயக்குநர் ஆடம் தாசனுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன். பாம்பு சட்டை படத்தின் தார்மீக விமர்சனங்கள் யாவும் எங்கள் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கு புதுவித நம்பிக்கையையும், உற்சாகத்தையும் தந்திருக்கிறது.
என்னுடைய இசையில் அடுத்து வெளியாக இருக்கும் திரைப்படம் திரி. இந்த படத்தில் பாடல்கள் உட்பட மொத்தம் 7 இசை பதிவுகள் இருக்கின்றது. அவை யாவும் இசை பிரியர்களின் உள்ளங்களை கொள்ளை கொள்ளும் விதத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது என்று நான் முழுவதுமாக நம்புகின்றேன்" என்று உற்சாகமாக கூறுகிறார் 'பாம்பு சட்டை' மற்றும் 'திரி' படத்தின் இசையமைப்பாளர் அஜீஷ்.
No comments:
Post a Comment