Thursday, 16 February 2017

Cine Mini: Latest updates on Endhiran 2.0, Viswaroopam 2, Kabaali 2

Cine Mini: Latest updates on Endhiran 2.0, Viswaroopam 2, Kabaali 2
Cine Mini: Latest updates on Endhiran 2.0, Viswaroopam 2, Kabaali 2
சினி மினி: எந்திரன் 2, விஸ்வரூபம் 2, கபாலி 2 பட்டைய கிளப்பப் போகும் பார்ட்-2 படங்கள் 
· சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெகுவேகமாக வளர்ந்துவரும் படம் 2.0. எந்திரன் படத்தின் அடுத்த பாகமாக வரவுள்ளது. படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளதாம். அதேநேரத்தில், படத்தின் கிராபிக்ஸ் வேலைகளும் படு வேகமாய் நடந்து வருகிறது. ஏப்ரல், மே மாதத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாம் தயாரிப்பாளர் தரப்பு. படத்தின் லேட்டஸ்ட் ஸ்பெஷல் என்ன தெரியுமா, கெஸ்ட் ரோலில் நடிக்க நடிகை ஐஸ்வர்யா ராயிடம் கேட்டுள்ளார்களாம். ஏற்கெனவே ஏமி ஜாக்சன் நடித்துவரும் நிலையில், உலக அழகியும் படத்தில் தோன்றுவது ரசிகர்களுக்கு கொண்டாட்டமாகவே அமையும்.
· உலகநாயகன் கமல் சகலமமுமாய் இருந்து வெளிவந்த படம் விஸ்வரூபம். பல்வேறு பிரச்சனைகள், தடைகள் தாண்டி திரைக்கு வந்த படம் பெரும் வெற்றி பெற்றது. படத்தின் இரண்டாம் பகுதி விரைவில் வெளியாகும் என கமல் கூறி வந்தார். ஆனால் அந்த படம் கைவிடப்பட்டு பாபாநசம், சபாஷ் நாயுடு என பல படங்களில் பணியாற்றி வருகிறார் கமல். இந்நிலையில் விஸ்வரூபம் 2 பற்றிய செய்தியை வெளியிட்டுள்ளார் கமல். படத்தின் VFX காட்சிகள் இன்னும் 6 மாதத்தில் முடிக்கப்பட்டுவிடும். அதன் பின்னர் ஆகஸ்டில் படம் வெளிவரும் என்றும் தெரிவித்துள்ளனர். விஸ்வரூபம் 2ல் நடிகை ஆண்ட்ரியாவுக்கு சண்டைக்காட்சிகள் கூட உள்ளதாம், ஆகையால் தாமும் அப்படத்தை எதிர்நோக்குவதாக தெரிவித்துள்ளார் நடிகை ஆண்ட்ரியா.
· கபாலி 2 படத்தின் தகவல்களை முதன்முதலில் வெளியிட்டவர் நடிகர் தனுஷ். தன்னுடைய வுண்டர்பார் தயாரிப்பு நிறுவனம் மூலம் இந்த படத்தை தயாரிக்கிறார் நடிகர் தனுஷ். தற்போது இந்த படத்தை பற்றிய முக்கியமான தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. படத்தின் திரைக்கதையை முழுவதும் நிறைவு செய்துவிட்டாராம் இயக்குனர் ரஞ்சித். 2.0 ஷூட்டிங் மார்ச்சில் முடிந்ததும் ஏப்ரலில் ஓய்வில் இருந்துவிட்டு மே மாதம் படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொள்ள உள்ளாராம் சூப்பர் ஸ்டார் ரஜினி. டிசம்பர் மாதம் ரஜினியின், பிறந்தநாள் வெளியீடாக திரைக்கு வரவுள்ளதாம் கபாலி 2. 
· Super star Rajni's 2.0 is in final stages of shooting. The movie is all set to hit the theatres in coming summer. The latest buzz is that actress Aishwarya Rai is approached to do a cameo in the film and the former Miss.World has accepted to do. 
· Kamal's Viswaroopam was a super hit after so many issues back in 2013. Subsequently Kamal was working on Viswaroopam 2, however the movie was shelved for unknown reasons. Recently actor Kamal stated that the long pending movie will hit floors this year end, as VFX work would take around 6 months.
· Super star Rajni who is currently working in 2.0 is all set to complete the movie in March. In May he will be joining the shooting of Kabali 2 which is scheduled to release on Rajni's birthday in December. Director Ranjith has already completed the screenplay of Kabali 2. 

No comments:

Post a Comment