Thursday, 16 February 2017

Edappadi is temporary, New CM in few month

Edappadi is temporary, New CM in few month
Edappadi is temporary, New CM in few month
எடப்பாடி தற்காலிகம் தான், மூன்று மாதத்தில் தமிழகத்துக்கு புதிய முதல்வர்
தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி நேற்று பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். ஒரு தேர்தலில் மூன்று முதல்வர்களை கண்ட மாநிலம் தமிழகம் தான் என பலரும் சொல்லி அங்கலாய்த்து வந்தனர் சிலர். ஆனால், கொஞ்சம் பொறுங்கள் மூன்று அல்ல, நான்காவது முதல்வரையும் காணப் போகிறோம். என்ன நம்ப முடியவில்லையா மேலும் படியுங்கள்.
சசிகலா சிறைக்குச் சென்றதும் அவருடைய தலையீடு தமிழக அரசில் இருக்காது என சிலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், சசிகலா சிறைக்குச் செல்லும்போதே தான் செய்ய வேண்டிய பணிகளை செய்வதற்காக தன் நம்பிக்கைக்கு உரிய டி.டி.வி.தினகரனை அதிமுகவின்  துணைப் பொதுச்செயலாளராக நியமித்து சென்றுள்ளார். இதன் மூலம், என்னதான் தன்னுடைய விசுவாசியாக இருந்தாலும் எடப்பாடியை கண்காணிக்கவும், தாங்கள் சொல்லும் வகையில் ஆட்சியை செலுத்தவும் தினகரனை நியமித்திருக்கிறார். 

மீண்டும் ஆட்சிக்கு வந்தது அதிமுக தான் என்றாலும், மன்னார்குடி குடும்பத்தின் கையில் முதல்வர் பதவி இருக்க வேண்டும் என நினைக்கிறார்களாம் சசிகலா மற்றும் குடும்பத்தினர்.  எனவே, வரவுள்ள ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் டி.டி.வி.தினகரனை நிற்க வைத்து, வெற்றி பெறச் செய்வதன் மூலம் முதல்வர் பதவியை தங்களுடையதாக்கிக் கொள்ள தயாராகி வருகிறது மன்னார்குடி குடும்பம். எப்படியாவது இன்னும் இரண்டே மாதங்களில் வெளியே வருவேன் என சபதத்தில் சிறையில் இருக்கும் சசிகலா, வெளியில் வந்து தினகரன் மூலமாக ஆட்சியை நடத்த உள்ளார். இதன் மூலம், நான்காவது முதல்வரையும் இந்த ஆட்சியில் பார்க்க இருக்கிறோம். 

Edappadi Palanisami has sworn in a new Chief Minister of Tamil Nadu. Though Sasikala is sent to jail, she has appointed her nephew TTV Dinakaran as Deputy General Secretary. We learn that Dinakaran is all set to contest in RK Nagar by-election and might take charge as new Chief Minister of Tamil Nadu in another 3 months. SO, TN will be having the fourth CM in the current rule.

No comments:

Post a Comment