'Girls go out and achieve challenging today's one!' - HIV Care convocation 'actress Sneha Talk!
'வி கேர்' நிறுவனத்தின் "வி கேர்ஸ் குளோபல் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் ஹோம் சயின்ஸ்" நடத்திய பட்டமளிப்பு விழாவில் நடிகை சினேகா, 'வி கேர்' நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர். E. கரோலின் பிரபா ரெட்டியுடன் கலந்துகொண்டார். 100க்கும் மேற்பட்ட பெண்கள் அழகுக்கலை சம்பந்தப்பட்ட படிப்பில் தேர்ச்சி பெற்றிருந்தனர். அவர்களுக்கு விழாவில் சான்றிதழும், பட்டமளிப்பும் நடைபெற்றது.
"வி கேர்ஸ் குளோபல் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் ஹோம் சயின்ஸ்" பட்டமளிப்பு விழாவில் புன்னகை இளவரசி நடிகை சினேகா பேசியது :-
இங்கே இருக்கும் அனைத்து அழகுக் கலை நிபுணர்களுக்கும் வணக்கம். "வி கேர் கரோலின் பிரபா அவர்களை எனக்கு 7 வருடங்களாகத் தெரியும். அவருடைய உழைப்பு மிகப்பெரியது. வி கேர் நிறுவனம் இன்று மிகப்பெரிய நிறுவனமாக உயர்ந்துள்ளது. இந்நிறுவனத்தின் 10 வது வருட பட்டமளிப்பு விழாவில் பங்குபெறுவதில் மிக்க மகிழ்ச்சி. எல்லாத் துறைகளும் பெண்களுக்கு சவாலான துறை தான். எந்த துறைக்குச் சென்றாலும், பெண்கள் சவால்களை சமாளித்துத் தான் முன்னேற முடியும்.
இங்கே இருக்கும் பெண்கள் அனைவருக்கும் வி கேர் பிரபா அவர்கள் மிகப்பெரிய எடுத்துக்காட்டு ஆவார். அழகுக் கலை நிபுணர்கள் மருத்துவர்களுக்கு நிகரானவர்கள். அழகுக் கலை நிபுணர்கள் கையில் அதிக திறமை உள்ளது. அவர்கள் நினைத்தால் இந்த உலகத்தையே அழகாக மாற்ற முடியும். வி கேர் பிரபா மேடம் உங்களுக்கு கற்றுக்கொடுத்த அனைத்து விஷயங்களையும் நீங்கள் சரியான வழியில் பயன்படுத்த வேண்டும். சினிமா நடிகைகள் மட்டும் தான் அழகாக இருக்க முடியும் என்ற காலம் மாறிவிட்டது. இப்போது நீங்கள் நினைத்தால் உலகத்தில் உள்ள அனைவரும் அழகாகலாம். நீங்கள் கற்றுக்கொண்ட விஷயங்களை சரியான வழியில் பயன்படுத்தி உதவிட வேண்டும்" என்றார் நடிகை சினேகா.
வி கேர் நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர். E. கரோலின் பிரபா ரெட்டி இவ்விழாவில் பேசியதாவது ;
வி கேர் நிறுவனம் துவங்கப்பட்டு 10 வருடம் ஆகிவிட்டது. இது வரை 2000 ஆண்டில் இருந்து நாங்கள் 15,000 மாணவர்களை உருவாக்கியுள்ளோம். வி கேர் நிறுவனம் இந்த அளவிற்கு பிரபலமாக என்னுடைய தங்கை டயானாவும் மிக முக்கியமான காரணம். நான் முதலில் ஆசிரியராகத் தான் பணியாற்றி வந்தேன். மாலை நான்கு மணிக்கெல்லாம் வீட்டிற்கு வருவது சுத்தமாக பிடிக்கவில்லை. அதனால் நான் அப்போது அழகுக் கலை கோர்ஸ் படிக்கலாம் என முடிவு செய்தேன். வெளிநாட்டுக்குச் சென்று ஒரு பெண் படிப்பது என்பது சாதாரண காரியம் அல்ல.
அதை எல்லாம் தாண்டி எங்கள் வீட்டில் வெளிநாட்டுக்கு சென்று படிக்க அனுமதி தந்தார்கள். மீண்டும் இங்கே வந்த பிறகு இங்கே உள்ள நிபுணர்களிடம் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டு இந்த வி கேர் நிறுவனத்தைத் துவங்கினேன். வி கேர் நிறுவனம் இன்று மிகப்பெரிய நிறுவனமாக உருவாகியுள்ளது. அன்று எங்களுக்கு இருந்தது போல் பிரச்சனைகள் இன்று உங்களுக்கு இல்லை. இன்றைக்கு அழகுக் கலை பற்றி அனைவரிடமும் நல்ல புரிதல் உள்ளது. இங்கே மாணவிகளின் பெற்றோர்களும் வருகை தந்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது.
சிலர் பெண்களுக்கு சரியாக படிப்பு வரவில்லை என்றால் அவர்களை அழகுக் கலை பற்றி படிக்க அனுப்பலாம் என்று சாதாரணமாக கூறுவார்கள். அது மிகவும் தவறானது. அழகுக் கலை என்பது இஞ்ஜினியரிங் , மருத்துவம் போன்ற தரம்வாய்ந்த ஒரு படிப்பாகும். அதை ஆர்வம் உள்ளவர்கள் மட்டும் தான் சரியாக கற்றுக்கொள்ள முடியும். வி கேரின் வெற்றிக்கு திறமையான பயிற்சி தருபவர்களும், ஆசிரியர்களும் தான் மிக முக்கிய காரணம்.
அவர்கள் கற்றுக்கொடுப்பதை பார்த்துக்கொண்டே இருக்கலாம். எங்களிடம் படித்த மாணவிகள் அனைவரும் பெரிய அளவில் சாதித்து வருகிறார்கள். அதைப் போல் இந்த வருடம் பட்டம் வாங்கும் நீங்களும் சாதிக்கவேண்டும். இங்கே நீங்கள் கற்றுக்கொண்டது கொஞ்சம் தான். மேலும் உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் நீங்கள் கற்றுக்கொள்ள நிறைய உள்ளது என்பது தான் உண்மை. அனைவரும் வாழ்க்கையில் சாதிக்க என் வாழ்த்துக்கள் என்றார் வி கேர் கரோலின் பிரபா.

Watch More
Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews,
Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch,
Etc..,, on Pakkatv
Like us: https://www.facebook.com/pakkatv/
Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q
Follow us:
Twitter: https://twitter.com/PakkaTv
Blogger : https://pakkatv.blogspot.in/
Most Viewed Video:
#1. Actor
Sivakarthikeyan Exclusive Unseen Video - https://youtu.be/TxvEOmhn09c
#2.
Bairavaa Heroine Insults Media People - https://youtu.be/tf5mZVMc3qo
#3. Vijay
Speaks Ajith’s Veeram Dialog in Bairavaa - https://youtu.be/e-cNHNpeAYk
#4. Truth
behind Mic Mohan’s Deadly diease Rumors - https://youtu.be/qnCgLvvdFnw
#5. Actor
Vivek Insults Sivakarthikeyan - https://youtu.be/KxXcjk0QbGM
#6. Lakshmi
Menon Avoided in Tamil Cinema - https://youtu.be/qZJBwjc3piY
#7. Reasons
Behind Kamal Haasan & Gautami Emotional Separation - https://youtu.be/1L5sNdRsrbU
#8.
Celebrities and their Previous Jobs | Jobs Before Acting - https://youtu.be/cPQbQN-Lc_Y
#9.
Dindigul L.Leoni Effective Comedy Speech at Mupperum Vizha - https://youtu.be/jjaa5venz48
#10.
Actress Revathi’s Past Husband acting in Surya’s Next Movie - https://youtu.be/IfBKTkJNW-M
#11. Kollywood
Actors Real Age and Date of Birth - https://youtu.be/t_tYGH-S7cY
#12. Thala Ajith Behind Sivakarthikeyan Success Emotional
Speech from Siva- https://youtu.be/rfVev8GwLK4
#13. Nayanthara’s Master Plan Against Vijay - https://youtu.be/3kW9YxjiFWA
#14. Dhanush- Who Are The Real Parents - https://youtu.be/Bu6chGRs_1M
#15. Rangaraj Pandey Interview with TN CM Jayalalithaa’s
Niece Deepa - https://youtu.be/eSmFkMJXfHE
No comments:
Post a Comment