Friday, 17 February 2017

SATHYABAMA UNIVERSITY HOSTS UBA PRO BASKETBALL LEAGUE SEASON 4 INAUGURATED BY NAGA CHAITANYA

SATHYABAMA UNIVERSITY HOSTS UBA PRO BASKETBALL LEAGUE SEASON 4 INAUGURATED BY NAGA CHAITANYA
SATHYABAMA UNIVERSITY HOSTS UBA PRO BASKETBALL LEAGUE SEASON 4 INAUGURATED BY NAGA CHAITANYA
யுபிஏ புரோ கூடைப்பந்து போட்டி இந்தியாவில் முதல் முறையாக சென்னை செம்மஞ்சேரியில் உள்ள சத்தியபாமா பல்கலைகழக வளாகத்தில் துவங்கியது
சென்னை சோழிங்கநல்லூர் அடுத்த செம்மஞ்சேரியில் உள்ள சத்தியபாமா பல்கலைகழகத்தில் உள்ள உள் விளையாட்டரங்கில் இந்தியாவில் முதல் முறையாக யுபிஏ புரோ கூடைபந்து போட்டி (UPB) துவங்கியது. இந்த போட்டியை பிரபல ஆந்திர மாநில நடிகர் நாகசைத்தன்யா வீரர்களை அறிமுகபடுத்திக் கொண்டு பின்னர் போட்டியை துவக்கி வைத்தார். உடன் யுபிஐ பிரதிநிதிகள், சத்தியபாமா பல்கலைகழக வேந்தர் மரியாஜீனா ஜான்சன் மற்றும் பல்கலைகழக துணைதலைவர் மேரி ஜான்சன் ஆகியோர் இருந்தனர். 
இந்த போட்டியின் துவக்க ஆட்டத்தில் பூனே ஸ்டீலஸ் அணியும்-ஐதராபாத் ஸ்கை அணியும் மோதிக்கொண்டதில் 57-55 என்ற புள்ளிக்கணக்கில் ஐதராபாத் ஸ்கை அணியை வீழ்த்தி பூனே ஸ்டீலஸ் அணி வெற்றி பெற்றது. வெற்றிப்பெற்ற பூனே ஸ்டீல் அணியின் சிறந்த வீரராக நரேந்தர் தேர்வு செய்யப்பட்டு அவருக்கு 13,500 ரூபாய்கான காசோலை வழங்கப்பட்டது. 
 இந்த போட்டியில் சென்னை, ஐதராபாத், பெங்களுர், பூனே, டெல்லி, மும்பை, பஞ்சாப், ஹரியானா போன்ற 8 மாநிலங்களை சேர்ந்த அணிகள் பங்குபெறுகின்றன. இந்த போட்டியானது. 16.2.2017 அன்று துவங்கி வரும் மார்ச் மாதம் 16ம் தேதிவரை நடைபெறுகிறது. 

No comments:

Post a Comment