Tuesday, 21 February 2017

Stalin threatens to commit suicide

Stalin threatens to commit suicide


Stalin threatens to commit suicide
தற்கொலைக்கு முயற்சி செய்வேன் ஸ்டாலின் மிரட்டல் 

கடந்தவாரம் சனிக்கிழமை அன்று தமிழக சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைந்த புதிய அரசு நமிபிக்கை வாக்கெடுப்பை கொண்டுவந்தது. ஆட்சி கவிழ வேண்டும் என திமுகவும் பல்வேறு யுக்திகளை கையாண்டது. ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தினார். ஆனால், அதற்கு சபாநாயகர் தனபால் மறுத்துவிட்டார். தொடர்ந்து நடந்த சபையில் கூச்சல் குழப்பங்களில் ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும் அவைக்காவலர்களால் வெளியேற்றப்பட்டனர். அப்போது நடந்ததாய் சில சம்பவங்களை மதிமுக கட்சித் தலைவர் வைகோ அவர்கள் வெளியிட்டுள்ளார். 

கொஞ்ச காலம் அரசியல்  பேசமாட்டேன் என மௌனம் காத்து, கருவேல மரம் அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த வைகோ நேற்று தன் மௌனத்தைக் கலைத்தார். சட்டசபையில் நடந்தவைக் குறித்து தனக்கு வந்த செய்திகளை வெளியிட்டு அரசியல் அரங்கில் அதிர்வை கிளப்பி இருக்கிறார். சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கு, ரகசியமாக நடைபெற வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரும், ஓ.பன்னீர்செல்வமும் திரும்பத் திரும்பக் கூறுவதும், அதனையே வலியுறுத்தி சமூகத்தின் பல்வேறு துறைகளில் இருக்கின்ற பலர் ஆதரித்து அறிக்கை விடுவதும், தொலைக்காட்சிகளில் அக்கருத்தை பதிவு செய்வதும் தொடர்ந்துகொண்டிருக்கும் நிலையில், இதுகுறித்து தமிழ்நாடு சட்டசபை விதிகளும், நாடாளுமன்ற மரபுகளும் எப்படி திட்டவட்டமாக வரையறுத்துள்ளன என் பதை தெளிவுபடுத்த நான் விரும்புகிறேன்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் ரகசிய வாக்கு என்ற பேச்சுக்கே இடம் இல்லை. 1952 ஜூலை 3ஆம் தேதி ராஜாஜி அமைச்சரவைக்கு நம்பிக்கை வாக்கு சட்டப்பேரவையில் நடைபெற்றபோதும், 1972 டிசம்பரில் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் மீதான நம்பிக்கை வாக்கின் போதும், 1988 ஜனவரி 28 ஆம் தேதி முதல்வர் ஜானகி அமைச்சரவை நம்பிக்கை வாக்கின்போதும் எத்தகைய முறை கடைப் பிடிக்கப் பட்டதோ, அதே முறையைத்தான் இன்றைய சட்டப்பேரவைத் தலைவர் தனபால் கடைப்பிடித்துள்ளார்.
மேலும், தங்களை சட்டசபையில் இருந்து வெளியேற்றும் போது ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் அவைக்காவலர்களை மிரட்டி உள்ளனர். எதிர்கட்சித் தலைவரான ஸ்டாலின் தான் வெளியேற்றப்பட்ட தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டியிருக்கிறார். துணை எதிர்க்கட்சித்தலைவர் துரைமுருகனோ ஒரு படி மேலே சென்று தன்னிடம் பிளேடு உள்ளது,  அதை வைத்து கையை கிழித்துக் கொண்டு உங்கள் மீது பழியை போட்டுவிடுவேன் என அநாகரீகமான நடந்துகொண்டுள்ளனர். இது வன்மையாக கண்டிக்காத தக்கது. இப்படி மிரட்டியவர்கள் வந்த காரை சோதனை செய்ததில் தவறேதும் இல்லை எனவும் கூறியுள்ளார். திமுக எம்எல்ஏக்களின் இந்த செயல்களை வைகோ வெளிப்படுத்தியுள்ளது பெரும் சலசலப்பை அரசியல் அரங்கில் உண்டாக்கியுள்ளது. 
MDMK chief Vaiko has revealed some information that he has got on recent uproar in Tamil Nadu assembly. During the ground test of Edappadi Palanisamy's government MK Stalin has demanded for secret polling, however it was denied by speaker Dhanapal. Later Stalin and other DMK MLAs protested against the decision and evicted by the Assembly securities. Vaiko told that Stalin and Duraimurugan of DMK have threatened the securities that they will commit suicide and will cut their hands with help of blades they had with them. Vaiko also said that secret polling is not functional in assembly since very long time. 

No comments:

Post a Comment